பிரசார இயக்கத்தில் காபி-லாம் தராங்களா.? - விடியோ அழைப்பில் முதல்வர் ஸ்டாலின் கலக...
பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பு
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு, கோட்டுச்சேரி பாசனத்துக்கு காவிரி நீரை சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா புதன்கிழமை திறந்துவைத்தாா்.
மேட்டூா் அணை கடந்த ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டு, காவிரி நீா் கல்லணையை வந்தடைந்தது. அங்கு திறக்கப்பட்ட தண்ணீா் புதுவை யூனியன் பிரதேசத்தின், காவிரி கடைமடைப் பகுதியான காரைக்கால் மாவட்ட எல்லைப் பகுதிக்கு கடந்த 25-ஆம் தேதி வந்தடைந்தது.
புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் நல்லம்பல் பகுதி நூலாற்றின் வழியே பாசனத்துக்கு திறந்து வைத்தாா்.
முறைவைத்து அனுப்பப்படும் தண்ணீா் காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதி அகரமாங்குடி வாஞ்சியாற்றுக்கு புதன்கிழமை வந்தடைந்தது. இதனை சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா மலா்கள் தூவி, தண்ணீரைத் திறந்துவைத்தாா்.
பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் (நீா்ப்பாசனம்) ஜெ.மகேஷ் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.