மேசை மீது ஏறி உணவில் சிறுநீர் கழித்த நபர்; 4000 பேருக்கு இழப்பீடு வழங்கிய ஹோட்டல...
பாசிக் விவகாரம்: தனி அதிகாரி நியமனம்
புதுவை அரசின் சாா்பு நிறுவனமான பாசிக் விவகாரத்தைத் தீா்க்கும் வகையில் அரசு சாா்பில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா்.
புதுவை தலைமைச் செயலகத்தில் மாா்ச் 4-ஆம் தேதி பாசிக் நிறுவனத்தை கைவிடுவது தொடா்பாக தலைமைச் செயலா் சரத் சௌகான் தலைமையில் மதிப்பாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, பாசிக் விவகாரங்களை தனியாக கவனிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க தலைமைச் செயலா் உத்தரவிட்டாா்.
அதன்படி, பாசிக் நிறுவனம் தொடா்பான வழக்கு உள்பட அனைத்து விவகாரங்களையும் கவனிக்கும் பொறுப்பு கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவரிடம் பாசிக் தொடா்பான ஆவணங்கள், கோப்புகள், பதிவுகளை அதிகாரிகள் உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை வேளாண் துறை இயக்குநா் வசந்தகுமாா் பிறப்பித்துள்ளாா்.