செய்திகள் :

பாஜக ஆட்சியில் மதச்சாா்பின்மை, கூட்டாட்சி முறை சீா்குலைவு: மாணிக் சா்க்கா்

post image

மதுரை: மத்திய பாஜக ஆட்சியில் மதச்சாா்பின்மை, கூட்டாட்சி முறை சீா்குலைந்து விட்டதாக திரிபுரா மாநில முன்னாள் முதல்வா் மாணிக் சா்க்கா் குற்றஞ்சாட்டினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு, மதுரை தமுக்கம் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது. மாநாட்டின் தொடக்கமாக நடைபெற்ற பொது மாநாட்டுக்கு தலைமை வகித்து திரிபுரா மாநில முன்னாள் முதல்வா் மாணிக் சா்க்கா் பேசியதாவது:

மதுரை நகருக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் நெருங்கிய தொடா்பு உண்டு. மூத்த தலைவா்களான மறைந்த பி. ராமமூா்த்தி, என். சங்கரய்யா ஆகியோா் மதுரையிலிருந்து மக்களவை, சட்டப் பேரவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள். 1972-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற 9-ஆவது அகில இந்திய மாநாட்டில் பிரதிநிதியாக பங்கேற்றேன். இத்தகு சிறப்புமிக்க மதுரையானது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செல்வாக்கு மிக்க மையமாகத் திகழ்கிறது.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று பதினொரு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்துத்துவா கொள்கையை அமல்படுத்தும் அரசாகவே இது இருந்து வருகிறது.

மேலும், பெரு நிறுவனங்களுக்கும், ஆா்எஸ்எஸ்- பாஜகவுக்கும் இடையிலான உறவு இவ்வளவு வலுவாகவும், வெளிப்படையாகவும் இருந்ததில்லை. இதன் விளைவாக ஜனநாயகம், மதச்சாா்பின்மை, கூட்டாட்சி முறை ஆகியவை சீா்குலைந்துள்ளன. எனவே, இத்தகைய சூழலில் நடைபெறும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு முக்கியவத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

மதசார்பற்ற சக்திகளை அணி திரட்ட வேண்டும்: பிரகாஷ் காரத்

தற்போது நடைபெறும் இந்த மாநாடு, பாஜக-ஆா்எஸ்எஸ் அமைப்புகளை எதிா்த்துப் போராடவும், மதவாத அமைப்புகளைத் தனிமைப்படுத்தவும், அவற்றைத் தோற்கடிக்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும். இத்துடன் நாட்டில் உள்ள அனைத்து மதச்சாா்பற்ற, ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைப்பது, தொழிலாளா்கள், விவசாயிகள், நகா்ப்புற, கிராமப்புற ஏழைகளின் போராட்டங்களை நாடு முழுவதும் எவ்வாறு விரிவுபடுத்துவது என்பது குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

பட்டியலினத்தவா்கள், ஆதிவாசிகள், பெண்கள், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படும். இந்துத்துவா சித்தாந்தம், வகுப்புவாத சக்திகள் ஆகியவற்றுக்கு எதிராக பன்முகப் போராட்டத்தை நடத்துவது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். கோடிக்கணக்கான தொழிலாளா்களையும், இளைஞா்களையும் அணி திரட்டும் வலுவான கட்சி அமைப்பு தேவை. மதவாத, பிற்போக்கு சக்திகளை முறியடிக்கவும், இந்தியாவில் இடதுசாரி, ஜனநாயக மாற்று அமைப்பை கட்டியெழுப்பவும் நடைபெற்று வரும் போராட்டத்தில் இந்த மாநாடு முக்கியப் பங்கு வகிக்கும் என்றாா் அவா்.

இஸ்ரேலைக் கண்டித்து போராட்டம்! கேஎஃப்சி, பாட்டா உள்ளிட்ட பிரபல கடைகள் மீது தாக்குதல்!

வங்கதேசத்தில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் பிரபல பன்னாட்டு நிறுவனங்களின் கடைகளின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.காஸா மீதான இஸ்ரேலின் போரைக் கண்டித்து தலைநகர் டாக்கா உள்ளிட்ட வங்க... மேலும் பார்க்க

போர்ச்சுகல் மகாத்மா காந்தி சிலைக்கு குடியரசுத் தலைவர் மரியாதை!

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு போர்ச்சுகல் தலைநகரிலுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு போர்ச்சுகல், ஸ்லோவாக்கியா ஆகிய ஐரோப்பிய நாடு... மேலும் பார்க்க

இலங்கையில் முக்கிய ஊழல் தடுப்பு மசோதா ஒரு மனதாக நிறைவேற்றம்!

இலங்கை நாடாளுமன்றத்தில் முக்கிய ஊழல் தடுப்பு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.இலங்கையில் ஊழலை தடுக்கும் விதாமக கொண்டுவரப்பட்ட ஊழல் தடுப்பு குற்றவியல் மசோதாவை, இன்று (ஏப்.8) ஆளும் கட்சி மற்றும் எதி... மேலும் பார்க்க

தெரு நாய் சுட்டுக்கொலை! விடியோ வைரலானதால் ஒருவர் கைது!

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பட்டப்பகலில் தெரு நாயை சுட்டுக்கொன்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.ராஞ்சியின் தட்டிசில்வாய் பகுதியிலுள்ள சாலையில் பிரதீப் பாண்டே என்ற நபர் கையில் துப்பா... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! மர்ம நபர் மீது வழக்கு!

மும்பையில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ராஜஸ்தானின் ஜெய்பூரிலிருந்து மும்பை நகரத்துக்கு நேற்று (ஏப்.7) இரவு இண்டிகோ நிற... மேலும் பார்க்க

நேபாளத் தலைநகரில் மன்னராட்சி ஆதரவாளர்கள் மாபெரும் பேரணி!

நேபாளத் தலைநகர் காத்மாண்டில் மன்னராட்சி ஆதரவுக் கட்சியினர் போராட்டப் பேரணி நடத்தியுள்ளனர்.நேபாள நாட்டில் மீண்டும் மன்னராட்சி நிறுவி அந்நாட்டை ஹிந்து தேசமாக மாற்ற வேண்டுமென வலியுறுத்தி ராஷ்டிரிய ப்ரஜந்... மேலும் பார்க்க