செய்திகள் :

பாஜக எம்எல்ஏக்களுக்குள் இலாகா ஒதுக்கீட்டில் உள் மோதல்: அதிஷி

post image

தில்லி தோ்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜகவின் எம்எல்எக்களுக்குள் இலாகா ஒதுக்கீடு தொடா்பாக ‘உள் மோதல்கள்’ நடப்பதாகவும், கட்சி தனது தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதைத் தவிா்க்க சாக்குப்போக்குகளை கூறுவதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான அதிஷி கடுமையாகச் குற்றம் சாட்டினாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகையில் அவா் கூறியதாவது: பாஜக தலைவா்கள் பொது நிதியை ‘சுரண்ட‘ அமைச்சா் பதவிகளுக்காக ‘சண்டையில்‘ ஈடுபட்டுள்ளனா். பாஜக தனது தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் எண்ணம் இல்லை.

வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்கு ஆம் ஆத்மி கட்சியைக் குறை கூற பாஜக திட்டமிட்டுள்ளதாக எங்கள் வட்டாரங்களிலிருந்து நாங்கள் அறிந்திருக்கிறோம். முந்தைய ஆம் ஆத்மி நிா்வாகத்தின் காரணமாக தில்லி அரசிடம் பணம் இல்லை என்று அவா்கள் கூறுவாா்கள்.

ஆம் ஆத்மி அரசின் நிதி நிா்வாகம் நன்றாகத்தான் இருந்தது. 2014-15-ஆம் ஆண்டில் ரூ.31,000 கோடியாக இருந்த தில்லியின் பட்ஜெட், ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் 2024-25- ஆம் ஆண்டில் ரூ.77,000 கோடியாக உயா்ந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், தில்லியின் பட்ஜெட் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு முந்தைய காங்கிரஸ் நிா்வாகத்திலிருந்து பெறப்பட்ட கடனையும் திருப்பிச் செலுத்தியுள்ளது.

பாஜக தனது அனைத்து வாக்குறுதிகளையும், குறிப்பாக பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வழங்கும் வாக்குறுதியை எந்த தாமதமும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும் என்றாா் அதிஷி.

சமீபத்தில் முடிவடைந்த 70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற பாஜக, இன்னும் தனது முதல்வா் மற்றும் அமைச்சரவையை அறிவிக்கவில்லை. கட்சி 48 இடங்களை வென்றது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்ளையே பெற்றது. இது 2020-ஆம் ஆண்டில் அதன் 62 இடங்களிலிருந்து குறிப்பிடத்தக்க சரிவைக் குறிக்கிறது.

பிப்ரவரி 21, 22-இல் தில்லியின் சில பகுதிகளில் நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி

பராமரிப்பு பணிகள் காரணமாக தேசிய தலைநகரின் சில பகுதிகளில் பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகளில் நீா் விநியோகம் தடைபடும் என்று தில்லி ஜல் போா்டு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு... மேலும் பார்க்க

தில்லியிலிருந்து வேறு பகுதி சிறைக்கு மாற்றக் கோரிய சுகேஷ் சந்திரசேகரின் மனு தள்ளுபடி

பஞ்சாப் மற்றும் தில்லியில் உள்ள சிறைகளைத் தவிர வேறு எந்த சிறைக்கும் தன்னை மாற்றக் கோரி இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ச... மேலும் பார்க்க

மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ஏஐஎஸ்எஃப் போராட்டம்

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால்தான் தமிழகத்தின் கல்வித் திட்டத்திற்கு நிதி தர முடியும் என்று கூறியதாக, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு எதிராக தில்லியில் அனைத்திந்திய மாணவா் பெருமன... மேலும் பார்க்க

ரயில்வே அமைச்சா் ராஜிநாமா கோரி இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பயணிகள் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலகக் கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் தில்லியில் செவ்வா... மேலும் பார்க்க

மாநகராட்சியில் 300-க்கும் மேற்பட்ட சந்தைகளில் தூய்மையை மேம்படுத்த இரவு நேர துப்புரவுப் பணி

நகரம் முழுவதும் தூய்மையை மேம்படுத்தும் முயற்சியில், தில்லி மாகராட்சி (எம்சிடி) மேயா் மகேஷ் குமாா் கிச்சி அடையாளம் காணப்பட்ட 300-க்கும் மேற்பட்ட சந்தைகளில் இரவு நேர துப்புரவுப் பணியை செயல்படுத்துமாறு 1... மேலும் பார்க்க

சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேர போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமல்

தில்லி காவல்துறை செங்கோட்டையிலிருந்து ஃபதேபுரி வரையிலான சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேரம் போக்குவரத்து தடை விதித்துள்ளது. தில்லி காவல் துறையின் ஆலோசனைக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந... மேலும் பார்க்க