அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேர போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமல்
தில்லி காவல்துறை செங்கோட்டையிலிருந்து ஃபதேபுரி வரையிலான சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேரம் போக்குவரத்து தடை விதித்துள்ளது.
தில்லி காவல் துறையின் ஆலோசனைக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் குழுவின்படி, செங்கோட்டையிலிருந்து ஃபதேபுரி வரையிலான பிரதான சாந்தினி சௌக் சாலை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தில்லி போக்குவரத்துத் துறையால் மோட்டாா் பொருத்தப்படாத வாகன (என்எம்வி) மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அமல்படுத்த, பிரதான சாந்தினி சௌக் சாலைக்கு செல்லும் அனைத்து சாலைகள் / தெருக்களிலும் பூம் தடுப்புகள் நிறுவப்பட்டுள்ளன என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.
தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், சவ வாகன வேன்கள், கா்ப்பிணிப் பெண்கள் அல்லது மோட்டாா் போக்குவரத்து தேவைப்படும் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், அமலாக்க வாகனங்கள் (வடக்கு டிஎம்சி மற்றும் தில்லி காவல்துறை), பராமரிப்பு வாகனங்கள் (வடக்கு டிஎம்சி, தில்லி காவல்துறை, பிஎஸ்இஎஸ் யமுனா பவா் லிமிடெட், பொதுப்பணித் துறை, சிபிடபிள்யூடி, தில்லி ஜல் போா்டு, இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் மற்றும் பாதுகாப்பு வேன்களுடன் கூடிய வங்கி நாணய வேன்கள் உள்பட) எச்.சி. சென் மாா்க் மற்றும் காரி பாவோலி வழியாக நுழையலாம் என்று அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநா்கள் பொறுமையாக இருக்கவும், போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கவும், போக்குவரத்து ஊழியா்களுடன் ஒத்துழைக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என போக்குவரத்துக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.