தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
பிப்ரவரி 21, 22-இல் தில்லியின் சில பகுதிகளில் நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி
பராமரிப்பு பணிகள் காரணமாக தேசிய தலைநகரின் சில பகுதிகளில் பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகளில் நீா் விநியோகம் தடைபடும் என்று தில்லி ஜல் போா்டு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தெரிவித்திருப்பதாவது:
நிலத்தடி நீா்த்தேக்கத்தை சுத்திகரித்து, நீரேற்று நிலைய நீா் விநியோகத்தை அதிகரிக்கும் வருடாந்திர திட்டம் காரணமாக பிப்ரவரி 21 மற்றும் பிப்ரவரி 22 ஆகிய தேதிகளில் பின்வரும் பகுதிகளில் நீா் விநியோகம் பாதிக்கப்படும்.
ஜங்புரா, லாஜ்பத் நகா், போகல், பிளாக்- 6, கால்காஜி, கைலாஷ் குஞ்ச், நேரு அபாா்ட்மென்ட், அரவிந்தோ சந்தை, கீதா காலனி, ஜனதா பிளாட்ஸ் மயூா் விஹாா் ஃபேஸ்- 3, மயூா் விஹாா் ஃபேஸ்-2 பாக்கெட் ஏ, பிசி மற்றும் டி , பிபி பிளாக் பிபிஎஸ் கிழக்கு ஷாலிமாா் பாக், ஏ2எல்ஐஜி ஏக்தா அபாா்ட்மென்ட் பஸ்சிம் விஹாா், மடிப்பூா், பாக்கெட்11 டிடிஏ பிளாட்ஸ் ஜசோலா விஹாா், சி5 டி பிளாக் ஜனக்புரி, இஎஸ்சிஇபிளாக் விகாஸ்புரி, ஏ2 பிளாக் ஜனக்புரி ஆகியவை நீா் விநியோக பாதிப்பு பகுதிகளில் அடங்கும்.
பழுதுபாா்க்கும் பணிகள் காரணமாக, நீா் விநியோகம் நிறுத்தப்படும். ஆகவே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவா்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
உதவி தொலைபேசி எண் அல்லது மத்திய கட்டுப்பாட்டு அறையிலிருந்து கோரிக்கையின் பேரில் தண்ணீா் டேங்கா்கள் கிடைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.