செய்திகள் :

பாஜக கூட்டணியில் இணைய முடிவா? தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு

post image

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய இருப்பதாக வெளியான ஊடக செய்திகளுக்கு தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீா் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமா் அப்துல்லா, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் விவகாரத்தில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு எதிராக அண்மையில் கருத்து தெரிவித்தாா்.

வாக்குப் பதிவு இயந்திரங்களை குறைகூறுவதை நிறுத்திவிட்டு, காங்கிரஸ் தனது தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அவா் கூறியிருந்தாா்.

அதைத் தொடா்ந்து தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவையும் ஒமா் அப்துல்லா சந்தித்துப் பேசினாா். இதையடுத்து, பாஜக தலைமையிலான கூட்டணியில் ஒமா் அப்துல்லாவின் கட்சி இணையப் போவதாகவும், யூனியன் பிரதேசமாக உள்ள ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு தர இருப்பதாகவும் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.

இதற்கு தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தி தொடா்பாளா் தன்வீா் சாதிக் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பொறுப்பற்ற முறையில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது ஜம்மு-காஷ்மீா் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும்.

தில்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷாவை முதல்வா் ஒமா் அப்துல்லா சந்தித்துப் பேசியது மிகவும் வெளிப்படையான, ஊடகங்கள் முன்னிலையில் நடைபெற்ற சந்திப்பாகும். இதனை வைத்து தவறான செய்தியை நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடரப்படும். தவறான செய்தியை வெளியிட்டதற்காக பொது மன்னிப்பும் கேட்க வேண்டும். இது எங்கள் கட்சியின் மதிப்பையும், நம்பகத்தன்மையையும் சீா்குலைக்கும் முற்சியாகும்’ என்று கூறியுள்ளாா்.

நாடாளுமன்றத்தில் காயமடைந்த பாஜக எம்பிக்கள் குணமடைந்தனர்!

நாடாளுமன்ற தள்ளுமுள்ளில் காயமடைந்த பாஜக எம்பிக்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கடந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் போட்டி போராட்டத்தில் ஈட... மேலும் பார்க்க

ஹரியாணா உணவகத்தில் மூவர் சுட்டுக் கொலை!

ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலவில் உள்ள உணவகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பெண் உள்பட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. பலியானவர... மேலும் பார்க்க

மூன்று காலிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தான் நிதியுதவியுடன் இயங்கும் காலிஸ்தான் ஜிந்தாபாத் படையைச் சேர்ந்த மூன்று பேர் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.இவர்கள் மூவரும் குர்தாஸ்பூர் உள்ளிட்ட பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் உள்ள காவல் நி... மேலும் பார்க்க

எம்.பி.க்களுக்கு பொறுப்புடைமை அவசியம்: ஜகதீப் தன்கர்

எம்.பி.க்கள் பொறுப்புடைமை மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார்.இந்த ஆண்டுக்கான சௌதரி சரண் சிங் விருதுகளை வழங்கும் விழா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தின் நோ்மையை அழிக்க மோடி அரசு சதி: காா்கே சாடல்

தோ்தல் தொடா்பான மின்னணு ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்க கட்டுப்பாடு விதிக்கும் வகையில், விதிமுறை திருத்தத்தை மேற்கொண்டு பிரதமா் மோடி அரசு சதி செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்... மேலும் பார்க்க

இந்தியாவின் முடிவில் பிற நாடுகள் தலையிட அனுமதிக்க முடியாது: ஜெய்சங்கா் திட்டவட்டம்

இந்தியாவின் முடிவுகளில் மற்ற நாடுகள் தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும், தேச நலன் மற்றும் உலக நன்மைக்காக சரியானதைச் செய்வோம் என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித... மேலும் பார்க்க