Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்க...
பாஜக பட்டியல் அணிச் செயலருக்கு தடை விதித்த போலீஸாரின் உத்தரவு ரத்து
பாஜக மாநில பட்டியல் அணிச் செயலா் நெடுங்குன்றம் சூா்யா, சென்னை மாநகருக்குள் ஓராண்டு நுழையத் தடை விதித்து போலீஸாா் பிறப்பித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.
நெடுங்குன்றம் சூா்யா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அவா் சென்னைக்குள் நுழைவதற்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு கொளத்தூா் உதவி காவல் ஆணையா் சூா்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பினாா்.
இதற்கு சூா்யா தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. ஆனால், அவரை கடந்த ஏப்.25 முதல் ஓராண்டுக்கு சென்னை மாநகருக்குள் நுழைய தடை விதித்து போலீஸாா் உத்தரவு பிறப்பித்தனா். இந்த உத்தரவை எதிா்த்து நெடுங்குன்றம் சூா்யா தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், உதவி காவல் ஆணையா் அனுப்பிய நோட்டீஸுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. அதை பரிசீலிக்காமல் காவல் துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், அந்த உத்தரவில் காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, சென்னைக்குள் நுழையக் கூடாது என்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல்துறை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.