செய்திகள் :

பாடகி தீயுடன் என்னை ஒப்பிடக்கூடாது: சின்மயி

post image

பாடகி தீயையும் தன்னையும் ஒப்பிடக்கூடாது என சின்மயி தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்வில் படத்தில் இடம்பெற்ற பாடல்களைப் பாடகர்கள் பாடினர்.

அதில், பாடகி சின்மயி பாடிய ‘முத்த மழை’ பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக, சின்மயி அப்பாடலைப் பாடிய விதத்தைப் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

ஆனால், திரைப்படத்தில் தெலுங்கு, ஹிந்தியில் சின்மயியும் தமிழ் மொழியில் பாடகி தீயும் பாடியிருந்தனர். தீ பாடியது ரசிகர்களிடம் போதிய கவனத்தைப் பெறவில்லை. இதனால், தமிழிலும் சின்மயியைப் பாட வையுங்கள் எனப் படக்குழுவுக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற சின்மயி, “தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் முத்த மழை பாடலை தீதான் பாடியிருப்பார். ஆனால், அன்று அவர் ஊரில் இல்லை. அதனால், நான் பாடினேன். எனக்குக் கிடைத்த வரவேற்பை நம்பவே முடியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. தீக்கு தனித்துவமான குரல் வளம் உண்டு. தமிழில் முத்த மழை பாடலுக்கு அவரைப் பயன்படுத்தியற்கு அப்பாடலுக்கு ஒரு வித்தியாசத்தைக் கொடுப்பதற்காகவும் இருக்கலாம்.

என்னுடைய 20-வது வயதில் முத்த மழையை இந்தளவிற்குப் பாடியிருக்க முடியாது. குரல் நுணுக்கங்களை அடைய நீண்ட கால அனுபவங்களும் காரணம். இளம் திறமையாளரான தீ இன்னும் 15 ஆண்டுகளில் 100 சின்மயி, ஷ்ரேயா கோஷல்களை விழுங்கலாம். எங்களுக்குள் எந்தப் போட்டிகளும் இல்லை. பாடகி தீயையும் என்னையும் ஒப்பிடக்கூடாது.” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: உயர்கல்வியை முடித்த மகள் தியாவுக்காக நெகிழ்ச்சியில் ஜோதிகா..! நடிகையா, இயக்குநரா?

லோகேஷ் கனகராஜ் படத்தில் பிரபல நடிகர்!

லோகேஷ் கனகராஜ் எழுத்தில் உருவாகும் பென்ஸ் படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதையில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகானக நடிக்கும் படத்திற்கு பென்... மேலும் பார்க்க

மன்னிப்பு சிறியவராக்காது; ஆணவம் பெரியவராக்காது! கமலுக்கு எடியூரப்பா கண்டனம்

கன்னட மொழி விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக நடிகரும், மநீம தலைவருமான கமல் பேசியிருந்தது சர்ச்சையானத... மேலும் பார்க்க

கமல்... கர்நாடகம்... தீராத குழப்பம்!

நடிகர் கமல் ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் கர்நாடகத்தில் சர்ச்சையாக மாறியுள்ளது.தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக நடிகர் கமல் இசைவெளியீட்டு விழாவில் பேசியது சர்ச்சையானதால், அதற்காக மன்னிப்புக் கேட்க... மேலும் பார்க்க

கோடை விடுமுறை.. திருப்பதியில் மே மாதம் சுவாமி தரிசனம் செய்தவர் எண்ணிக்கை!

சென்னை; திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் 23.79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு மே மாதத்தை ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை 55 ஆயிரம் அதிகம் ... மேலும் பார்க்க

மன்னிப்புக் கேட்காத கமல்: கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைப்பு

தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக நடிகரும், மநீம தலைவருமான கமல் பேசியிருந்த நிலையில், அதற்காக மன்னிப்புக் கேட்காததால், கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.மொழி... மேலும் பார்க்க

சின்மயி மீதான தடையை நீக்குவதில் என்ன சிக்கல்?

பாடகி சின்மயி மீது விதித்த தடையை நீக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் சின்மயி குரலில் இடம்பெற்ற, ‘ஒரு தெய்வம் தந்த பூவே... மேலும் பார்க்க