செய்திகள் :

கமல்... கர்நாடகம்... தீராத குழப்பம்!

post image

நடிகர் கமல் ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் கர்நாடகத்தில் சர்ச்சையாக மாறியுள்ளது.

தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக நடிகர் கமல் இசைவெளியீட்டு விழாவில் பேசியது சர்ச்சையானதால், அதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், மன்னிப்புக் கேட்க மறுத்ததால், கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விருமாண்டி, விஸ்வரூபம் படங்களைத் தொடர்ந்து தக் லைஃப் திரைப்படம் வெளியீட்டில் பிரச்னையைச் சந்தித்துள்ளது சினிமா ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம், தக் லைஃப் வெளியீட்டு பிரச்னையைத் தாண்டி கர்நாடகத்திற்கும் கமல் ஹாசனுக்கும் இடையேயான சுவாரஸ்யமான வதந்தியும் நினைவுகூறப்படுகிறது.

நடிகர் கமல் ஹாசனின் இயற்பெயர் பார்த்தசாரதி சீனிவாசன். பின்பு, கமல் ஹாசன் எனத் தன் தந்தையால் பெயர் மாற்றம் செய்யப்படுகிறார். கமல் என்பது தாமரையைக் குறிக்கும் சமஸ்கிருத வார்த்தை. ஹாசன் என்பது கமல் தந்தையின் நண்பரும், குருவுமான யாகூப் ஹாசன் என்பவரின் நினைவாக வைக்கப்பட்டது. கமலுக்கு முன்பே அவரின் சகோதரர்களான சாரு ஹாசன், சந்திர ஹாசன் பெயர்களும் அதன்பொருட்டே வைக்கப்பட்டன. இவர்களின் ஹாசனுக்கான பெயர் காரணம் இதுதான்.

ஆனால், கர்நாடகத்திலிருக்கும் ஹாசன் மாவட்டத்திலிருந்து தமிழகம் வந்ததாலேயே கமல் குடும்பத்தினர் ஹாசன் பெயரை இறுதியாகச் சேர்த்துக்கொள்வதாக நீண்ட காலமாக ஒரு வதந்தி இருக்கிறது. இந்த அடையாளத்தை வேண்டுமென்றே கமல் குடும்பம் மறைக்கிறது எனச் சிலர் அடிக்கடி கருத்து தெரிவிப்பதும் வழக்கம்.

ஆனால், அதில் எந்த உண்மையும் இல்லை. மத நல்லிணக்கத்திற்காகவே இஸ்லாமியரின் பெயரை எங்கள் தந்தை சூட்டினார் என பலமுறை கமல்ஹாசனே கூறியிருக்கிறார்!

இதையும் படிக்க: சின்மயி மீதான தடையை நீக்குவதில் என்ன சிக்கல்?

எதிர்பார்ப்புகள், சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியானது தக் லைஃப்!

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.கன்னட மொழிப் பிரச்னை காரணமாக கர்நாடக மாநிலத்தில் மட்டும் தக் லைஃப் திரைப்படத்தின் வெளியீட்டை தயாரிப்பு நிறுவனம் ஒத்திவை... மேலும் பார்க்க

தக் லைஃப் படத்துக்கு ஒரு சிறப்புக் காட்சி

தக் லைஃப் படத்துக்கு வியாழக்கிழமை (ஜூன் 5) ஒரு நாள் மட்டும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஒரு சிறப்... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை மகளிா் ஹாக்கி: முதல் ஆட்டத்தில் இந்தியா-தாய்லாந்து மோதல்

சீனாவின் ஹாங்ஷௌ நகரில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை மகளிா் ஹாக்கிப் போட்டியில் முதல் ஆட்டத்தில் இந்தியா தாய்லாந்து அணியுடன் மோதுகிறது. ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு சாா்பில் ஹாங்ஷௌ நகரில் வரும் செப். 5 முதல் ... மேலும் பார்க்க

கருணாகரன்-வரியத் இணை முன்னேற்றம்

இந்தோனேஷிய ஓபன் சூப்பா் 1000 பாட்மின்டன் போட்டி கலப்பு இரட்டையா் பிரிவில் இரண்டாம் சுற்றுக்கு இந்தியாவின் கருணாகரன்-வரியத் இணை முன்னேறியது. ஜகா்த்தாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் புதன்கிழமை கலப்ப... மேலும் பார்க்க

‘மனுஷி’ திரைப்படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள்: விளக்கமளிக்க தணிக்கை வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

இயக்குநா் வெற்றிமாறன் தயாரித்துள்ள மனுஷி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்கள் எவை என்பது குறித்து விளக்கம் அளிக்க தணிக்கை வாரியத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள... மேலும் பார்க்க

நடிகா் சங்க கட்டுமானப் பணிகளுக்காகவே பதவிக்காலம் நீட்டிப்பு: உயா்நீதிமன்றத்தில் நடிகா் விஷால் பதில்

சென்னை, ஜூன் 4: நடிகா் சங்க கட்டடத்தின்கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே சங்க உறுப்பினா்களின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டதாக தென்னிந்திய நடிகா் சங்கத்தின் பொதுச் செயலா... மேலும் பார்க்க