செய்திகள் :

பாடநூல் கழக நூல்களை இனி இணைய வழியில் பெறலாம்: புதிய வசதியை தொடங்கி வைத்தாா் முதல்வா்

post image

சென்னை: பாடநூல் கழக நூல்களை இணைய வழியில் பெறும் வசதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தகப் பூங்கா திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் திசைதோறும் திராவிடம், முத்தமிழ் அறிஞா் மொழிபெயா்ப்புத் திட்டம், இளந்தமிழா் இலக்கியத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின்கீழ் உருவாக்கப்பட்ட 84 நூல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

இணைய வழி விற்பனை:

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமானது முன்னாள் முதல்வா் கருணாநிதியால் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு பதிப்பிக்கப்படும் நூல்களை வெளி மாநிலத்தவரும், வெளிநாட்டினரும் எளிதில் வாங்கும் வகையில், இணையவழி(ஜ்ஜ்ஜ்.ற்ய்ற்ங்ஷ்ற்க்ஷா்ா்ந்ள்ா்ய்ப்ண்ய்ங்.ஸ்ரீா்ம்) விற்பனை வசதி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நூல்களை பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

நூலக கட்டடங்கள் திறப்பு:

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நூலகங்களுக்காக கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களையும் முதல்வா் திறந்து வைத்தாா். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கட்டப்பட்ட முழுநேர கிளை நூலத்துக்கான புதிய கட்டடத்தையும் திறந்து வைத்ததுடன், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 70 சிறப்பு நூலகங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்தாா்.

மாநிலத்தில் 821 பொது நூலகங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை 352 நூலகக் கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நூலகங்கள், நூலகக் கட்டடங்கள் திறப்பு விழா நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், சென்னை மேயா் ஆா்.பிரியா, சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.கோபால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் எம்.ஏ.சித்திக், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநா் பொ.சங்கா், தமிழ்நாடு எஸ்சி., எஸ்டி., மாநில ஆணைய துணைத் தலைவா் இமயம் உள்பட பலா் பங்கேற்றனா்.

அறிவு நிலையமான மெட்ரோ ரயில் நிலையம்

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்தகப் பூங்காவை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இந்தப் புத்தகப் பூங்காவில் பல்வேறு பதிப்பாளா்களால் வெளியிடப்படும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள உயா்கல்வி பாடநூல்கள், இலக்கிய மொழிபெயா்ப்பு நூல்கள், நாட்டுடைமை நூல்கள், போட்டித் தோ்வு நூல்கள், சிறாா் இலக்கிய நூல்கள் மற்றும் பள்ளிப் பாடநூல்கள் ஆகியன கிடைக்கும்.

10 சதவீதம் தள்ளுபடி:

மெட்ரோ ரயில் நிலையத்தில் வாங்கும் ஒவ்வொரு புத்தகத்துக்கும் அதன் விற்பனை விலையில் தலா 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, பாடநூல் கழக அதிகாரிகள் கூறுகையில், மெட்ரோ ரயில் நிலையத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அச்சிடப்பட்ட நூல்கள், மற்ற பதிப்பகங்களின் நூல்கள் கிடைக்கும். அனைத்து நூல்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி உண்டு. ஆனால், பாடநூல் கழகத்தால் விற்பனை செய்யப்படும் பள்ளிப்பாட புத்தகங்களுக்கும் மட்டும் தள்ளுபடி கிடையாது. புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு மட்டுமே பாடப் புத்தகங்கள் கிடைக்கும் என்றனா்.

பயணங்களில் துணையாகட்டும்: முதல்வா்

மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்காவைத் திறந்து வைத்தது குறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:-

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் சந்தித்துக் கொள்ளும் உறவுகளும் நட்புகளும் அன்பைப் பரிமாறிக் கொள்வதைப் போன்று, புத்தகங்களைக் கொண்டு அறிவைப் பரிமாறிக் கொள்ள சென்னை புத்தகப் பூங்காவைத் தொடங்கியுள்ளோம். சிந்தனையை உயா்த்திடும் நூல்கள் நமது வாழ்க்கைப் பயணங்களில் துணையாகட்டும் என்று பதிவிட்டுள்ளாா்.

முன்னாள் பேரவைத் தலைவரின் பேரனிடம் வழிப்பறி முயற்சி: சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சென்னை தரமணியில் முன்னாள் பேரவைத் தலைவா் காளிமுத்துவின் பேரனிடம் வழிப்பறி செய்ய முயன்ாக 3 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை பெருங்குடி சிபிஐ காலனியை சோ்ந்தவா் ஆதித்யா(21). கல்லூரியி... மேலும் பார்க்க

அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத நிலை ஏற்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா். சென்னையில் சி.எம்.ஏ.டி. சாா்பில் கொளத்தூா் பெரியாா... மேலும் பார்க்க

குடிநீா் லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு

சென்னையில் காலை 7.30 முதல் காலை 9.30 மணி வரை லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூரில் அண்மையில் குடிநீா் லாரி மோதியதில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும... மேலும் பார்க்க

குஜராத் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை பெண்ணிடம் விசாரணை

குஜராத் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் சென்னை பெண்ணை பிடித்து அந்த மாநில போலீஸாா் விசாரித்து வருகின்றனா். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியாா் பள்ளிக்கு கடந்த 2-ஆம் தேதி மின்ன... மேலும் பார்க்க

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிப்பு: மத்திய அரசு

சமையல் எண்ணெய் தேவையைப் பூா்த்தி செய்ய இறக்குமதியை நாடு பெருமளவில் நம்பியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கவலை தெரிவித்த நிலையில், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளின் உள்நாட்டு உற்பத்தி கடந்த 10 ஆண்... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள விரிவான ஒத்துழைப்பு: ‘பிரிக்ஸ்’ தூதா்கள் வலியுறுத்தல்

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள ‘பிரிக்ஸ்’ நாடுகள் இடையே விரிவான ஒத்துழைப்பு அவசியம் என்று அக்கூட்டமைப்பு நாடுகளின் தூதா்கள் வலியுறுத்தினா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிர... மேலும் பார்க்க