செய்திகள் :

பாதல் லோக் சீசன் - 2 வெளியீட்டுத் தேதி!

post image

பிரபல இணையத் தொடரான பாதல் லோக்கின் இரண்டாவது சீசன் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான இணையத் தொடர் பாதல் லோக் (paatal lok). இயக்குநர்கள் அவினாஷ் அருண், ப்ரோசித் ராய் இயக்கத்தில் உருவான இத்தொடரில் ஒரு பத்திரிகையாளரின் பார்வையிலிருந்து கொலைகளும், அதன் பின்னணிகளும் விரிவாக அலசப்பட்டிருக்கும்.

இந்தியளவில் இதுவரை வெளியான தொடர்களில் பாதல் லோக் தனித்துவமான இடத்தையே பெற்றிருக்கிறது.

இதையும் படிக்க: உண்மை சம்பவத்தைப் படமாக்கும் ராஜ்குமார் பெரியசாமி?

நடிகர்கள் ஜெய்தீப் அலாவத், அபிஷேக் பானர்ஜி, நீரஜ் கபி உள்ளிட்டோர் நடிப்பில் கிரைம், திரில்லர் பாணியில் இத்தொடர் உருவாகியிருந்தது.

முதல் சீசனில் ஒரு திருப்பத்துடன் தொடர் நிறைவடைந்ததால் அதன் இரண்டாம் பாகம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இதனால், அதற்கான படப்பிடிப்புகள் சில மாதங்களாக நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், அவினாஷ் அருண் இயக்கிய பாதல் லோக் தொடரின் இரண்டாவது சீசன் அடுத்தாண்டு ஜனவரி 17 ஆம் தேதி வெளியாகும் என அமேசான் பிரைம் அறிவித்துள்ளது.

பின்லாந்தில் -20 டிகிரி செல்சியஸ் நீரில் குளித்த ரொனால்டோ..!

கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட ரொனால்டோ குடும்பத்துடன் பின்லாந்து சென்றுள்ளார். அங்கு -20 டிகிரி செல்சியஸில் மேலாடையின்றி குளித்த விடியோ வைரலாகி வருகிறது. ரியல் மாட்ரிட்டின் முன்னாள் வீரர் கிறிஸ்டியானோ ரொ... மேலும் பார்க்க

அருண் தெய்வம் மாதிரி! ராணவ் மீது வன்மம் ஏன்? செளந்தர்யாவை விமர்சித்த குடும்பத்தினர்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ராணவ் மீது ஏன் அத்தனை வன்மம் என நடிகை செளந்தர்யாவிடம் அவரின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பிக் பாஸ் போட்டியின்போது காயம... மேலும் பார்க்க

கூலியுடன் மோதும் ரெட்ரோ?

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் சூர்யாவின் திரைப்பட வெளியீடுகள் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்... மேலும் பார்க்க

சிவராஜ்குமாருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை!

நடிகர் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கன்னட சினிமாவில் நட்சத்திர நடிகராக இருப்பவர் நடிகர் சிவராஜ்குமார். மறைந்த நடிகர் ராஜ்குமாரின... மேலும் பார்க்க

அகத்தியா வெளியீட்டுத் தேதி!

நடிகர்கள் ஜீவா, அர்ஜுன் நடிப்பில் உருவாகும் அகத்தியா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜுன் முன்னணி கதாபாத்திரங்களில் ந... மேலும் பார்க்க

எனது மகன் இறந்துவிட்டான்.. த்ரிஷா பகிர்ந்த சோகச் செய்தி!

எனது மகன் இறந்துவிட்டான் என்று நடிகை த்ரிஷா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு சோகமான செய்தியைப் பதிவு செய்திருக்கிறார்.நடிகை த்ரிஷா, ஜோரோ என்று பெயரிடப்பட்ட நாயை செல்லமாக வளர்த்து வந்தார். அவ்வப்போது அதனு... மேலும் பார்க்க