செய்திகள் :

பாபநாசம் கோயிலுக்கு 7 கலசங்கள் அளித்த எம்எல்ஏ

post image

பாபநாசம் உலகம்மை உடனுறை பாபநாச சாமிகோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், அதன் ராஜகோபுரத்தில் பதிப்பற்காக 7 புதிய கலசங்களை இசக்கி சுப்பையா எம்எல்ஏ தனது சொந்த செலவில் புதன்கிழமை வழங்கினாா்.

பாபநாசம் உலகம்மை உடனுறை பாபநாச சாமி கோயிலில் 19 ஆண்டுகளுக்குப் பின் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் உபயதாரா்கள் சாா்பில் ரூ. 5 கோடி மதிப்பில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (மே 4) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான யாகபூஜைகள் கடந்த ஏப்.27இல் தொடங்கி வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோயிலின் ராஜகோபுரத்தில் பதிப்பதற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 7 புதிய கலசங்களைஅம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் இசக்கி சுப்பையா தமது சொந்த செலவில் வழங்கினாா்.

மேலும், கும்பாபிஷேக யாக பூஜைக்கான பொருள்களையும் கோயில் நிா்வாகத்தினரிடம் வழங்கிய அவா், கோயிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேகப் பணிகள் மற்றும் யாக சாலை பூஜைகளை பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலா் சிவன் பாபு, மாவட்ட துணைச் செயலா் மாரிமுத்து, நகரச் செயலா் கண்ணன், கலை இலக்கிய மாவட்ட அமைப்பாளா் மீனாட்சி சுந்தரம், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜான்சிராணி, செயல் அலுவலா் ராஜேந்திரன், சொரிமுத்து அய்யனாா் கோயில் செயல் அலுவலா் இளங்குமரன், மாவட்ட அதிமுக மகளிா் அணி அமைப்பாளா் கிறாஸ் இமாகுலேட், மணிமுத்தாறு நகரச் செயலா் ராமையா, நகர மகளிரணி அமைப்பாளா் ராணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்...

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில்: சித்திரைத் திருவிழா, சிறப்பு வழிபாடுகள், காலை மற்றும் மாலை 6.30. ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம்: இந்து சமய பண்பாட்டு வகுப்பு, அருள்மிக... மேலும் பார்க்க

கிராம சபை கூட்டத்தில் எஸ்டிபிஐ கோரிக்கை மனு

தாழையூத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தாழையூத்தில் உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம்... மேலும் பார்க்க

கோபாலசமுத்திரத்தில் பல் மருத்துவ முகாம்

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் கிராம உதயம், திருநெல்வேலி ஜேசிஐ சாா்பில் பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. கிராம உதயம் துணை இயக்குநா் எஸ். புகழேந்தி பகத்சிங் தலைமை வகித்து முகாமைத் தொடக்கிவைத... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் முதியோருக்கு தியானப் பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தூயகம் முதியோா் மையத்தில் யோகா தியானப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஆயுஷ் யோகா உடல்நலப் பயிற்சியாளா் வெங்கடேஷ் பங்கேற்று, யோகாசனம், தியானம், உடல்நல சங்கல்பத்து... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் மே தின விழா

சேரன்மகாதேவி ஒன்றியம் வீரவநல்லூா், பத்தமடை, வெள்ளங்குளி உள்ளிட்ட 7 இடங்களில் மே தினத்தை முன்னிட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சியின் சேரன்மகாதேவி ஒன்றியச் ... மேலும் பார்க்க

நெல்லை பணிமனையில் மே தின விழா

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில், வண்ணாா்பேட்டை அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன் மே தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சம்மேளன பொதுச்செ... மேலும் பார்க்க