செய்திகள் :

பாம்பன் புதிய பாலம்... பயணிகள் ரயில் இயக்க அனுமதி அளித்தது ரயில்வே பாதுகாப்பு வாரியம்!

post image

ராமேஸ்வரம் தீவு பகுதியினை நாட்டின் நில பரப்புடன் இணைக்க கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ரயில் பாலம் கடல்காற்றின் அரிமானத்தால் வழு இழந்தது. இதையடுத்து புதிய பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனமான ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் மூலம் கட்டப்பட்டு வரும் இந்த புதிய பாலத்தின் நடுவே 72.5 மீட்டர் லிஃப்டிங் கிர்டர் செங்குத்தாக மின் இயந்திரவியல் சக்தி மூலம் திறந்து கப்பல்களுக்கு வழிவிடும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. (பழைய பாலம் இருபுறமும் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் மனித ஆற்றல் மூலம் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது).

பாம்பன் கடல் மீது கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலம்

இந்த புதிய பாலம் செங்குத்தாக திறக்கப்படும் இந்தியாவின் முதல் பாலமாக அமைய உள்ளது. பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் நடுவில் உள்ள லிப்டிங் கிர்டர் 17 மீட்டர் உயரத்திற்கு மேலே செல்லும்.

புதிய மற்றும் பழைய ரயில் பாலம்

இது அருகிலுள்ள சாலை பாலத்திற்கு இணையான உயரம் ஆகும். சுமார் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இணைந்து பணியாற்றி வரும் இந்த நவீன பாலத்திற்காக கடலில் 333 காங்கிரிட் அடித்தளங்கள், 101 காங்கிரிட் தூண்கள் ஆகியவற்றின் மேல் எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு இரட்டை ரயில் பாதை அமைக்கும் வகையில் அடித்தளமும் தூண்களும் அகலமாக அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு ஒரு ரயில் பாதை மட்டுமே அமைக்கப்படுகிறது. மேலும் ரயில்களை மின்சாரம் மூலம் இயக்கும் வகையில் மின் மயமாக்கல் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய தூக்கு பாலத்தில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

இந்நிலையில் புதிய பாலத்திற்கான பணிகள் முழுமையடைந்த நிலையில் பல்வேறு வகையான சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு பாலத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் செளத்திரி தலைமையில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் கிடைத்த பதிவுகளை கொண்டு பாலத்தின் உறுதி தன்மை திருப்திகரமாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புதிய பாலத்தில் பயணிகள் ரயிலை இயக்குவதற்கான அனுமதியினை தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் செளத்ரி வழங்கியுள்ளார். இதன்படி புதிய பாலத்தில் அதிகபட்சமாக மணிக்கு 75 கி.மீ வேகத்தில் இயக்கவும், கப்பல்கள் செல்ல வழி ஏற்படுத்தும் தூக்கு பாலத்தில் மட்டும் 50 கி.மீ வேகத்தில் இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாம்பன் கடலில் அமைந்துள்ள பால பகுதிகளில் காற்றின் வேகம் 100 கி.மீ அளவில் இருந்தால் செங்குத்து பாலத்தினை ஏற்றி இறக்க கூடாது எனவும், மணிக்கு 58 கி.மீ வேகத்தில் காற்று வீசினால் ரயிலை இயக்க கூடாது எனவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம்

தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் இந்த அனுமதியை தொடர்ந்து விரைவில் ராமேஸ்வரத்திற்கு மீண்டும் ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் இன்னும் முழுமை அடையவில்லை. இதனால் ராமேஸ்வரத்திற்கு குறிப்பிட்ட சில ரயில்களே இயக்கும் நிலை உள்ளது. எனவே ராமேஸ்வரம் ரயில் நிலைய புனரமைப்பு பணிகளை விரைவாக முடித்து அனைத்து ரயில்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Adani: `அமெரிக்கா குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை!' - என்ன சொல்கிறார் மூத்த வழக்கறிஞர்?!

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா நீதிமன்றத்தின் குற்றப்பத்திரிகையில் கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் அதானி குழுமத்தின் முக்கிய நிர்வாகி வினீத் ஜெயின் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் சாட்டப்படவில்லை என்... மேலும் பார்க்க

Israel: `போர் முடிகிறது' - அறிவித்த ஜோ பைடன்... `ஆனாலும், தொடங்கும்' - செக் வைத்த நெதன்யாகு!

'இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் முடிவடைகிறது' என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் தொடங்கியது. பாலஸ்தீனத்திற்கு ஆதாரவாக, லெபனானில் இருக்... மேலும் பார்க்க

Rahul Gandhi: `ராகுல் காந்தியின் இங்கிலாந்து குடியுரிமை!?'; விசாரித்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமையை ரத்து செய்யக்கோரி அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி எஸ்.விக்னேஷ் ஷிஷிர் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய... மேலும் பார்க்க

`ராமதாஸ் விவகாரத்தில் கொதிக்கும் பாஜக' - பாமக மீது பாசமா? அரசியல் கணக்கா?!

லஞ்ச விவகாரம்...இந்திய கோடீஸ்வரரும், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக அறியப்படுபவருமான கௌதம் அதானி தரப்பு ஒப்பந்தம் ஒன்றை பெறுவதற்காக 250 மில்லியன் டாலர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தாகவும், அதை மறைக்க... மேலும் பார்க்க

``CA தேர்வின் தேதி மாற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால்'' - மத்திய அரசு குறித்து கனிமொழி

பொங்கல் தினத்தன்று (14.1.2025) CA தேர்வு வைக்கப்பட்டுள்ளதாக அட்டவணை வெளியாகியிருந்தது.இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி,... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பதவியை ராஜினாமா செய்த முதல்வர், துணை முதல்வர்கள்... அடுத்த முதல்வர் யார்..?

மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவி யாருக்கு என்பதில் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. முதல்வர் ப... மேலும் பார்க்க