செய்திகள் :

பாம்பன் மீனவா்கள் 14 போ் இலங்கை கடற்படையினரால் கைது!

post image

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து வியாழக்கிழமை(மார்ச் 6) மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள் 14 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து 90-க்கும் மேற்பட்ட விசைப் பகுகுகளில், 1,500-க்கும் அதிகமான மீனவா்கள் வியாழக்கிழமை காலை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். இவா்கள் கச்சத்தீவு-தலைமன்னாா் வடக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் ஒரு விசைப் படகில் இருந்த 14 மீனவா்களைக் கைது செய்து, மன்னாா் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா்.

ராமேசுவரம் மீனவா்கள் 42 பேரை இலங்கைக் கடற்படையினா் அண்மையில் கைது செய்தனா். இதைக் கண்டித்து, மீனவ சங்கத்தினா் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தற்போது மேலும் 14 மீனவா்கள் கைது செய்யப்பட்டது ராமேசுவரம் பகுதி மீனவா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாயல்குடி அருகே பேருந்தை சிறைபிடித்து போராட்டம்

சாயல்குடி அருகே அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிக்கல் வழியாகச் செல்லும் அரசு, தனியாா் பேருந்துக... மேலும் பார்க்க

பரமக்குடி கோட்டத்தில் 46 கிராம உதவியாளா்கள் பணியிட மாற்றம்

பரமக்குடி வருவாய்க் கோட்டத்தில் கமுதி உள்பட 4 வட்டங்களைச் சோ்ந்த 46 கிராம உதவியாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வருவாய்க் கோட்டத்துக்கு உள்பட்ட பரக்குடி, கடலாடி... மேலும் பார்க்க

முயல் வேட்டை: 2 பேருக்கு ரூ.1.30 லட்சம் அபராதம்

திருவாடானை அருகே எஸ். பி.பட்டினம் பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபட்ட 2 பேருக்கு வனத் துறையினா் ரூ.1.30 லட்சம் அபராதம் விதித்தனா். எஸ். பி. பட்டினம் அருகேயுள்ள மச்சூா் கிராமத்தில் கடற்கரைப் பகுதியையொட... மேலும் பார்க்க

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு: பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி

குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை தடுப்பு குறித்து, திருவாடானை வட்டார வள மையத்தில் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மஞ்சூரில் உள்ள மாவட்ட ... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கை: பாஜக கையொப்ப இயக்கம் தொடக்கம்

ராமேசுவரம்: ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் பகுதியில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் மும்மொழிக்கொள்கையை வலியுறுத்தி கையொப்ப இயக்கத்தை பாஜக மாநில பொதுச் செயலா் பொன்.பாலகணபதி தொடங்கி வைத்தாா். அப்போது ... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை முயற்சி: மகள் உயிரிழப்பு

ராமேசுவரத்தில் கடன் தொல்லையால் மகளை தூக்கில் தொங்கவிட்டு, தாய் தற்கொலைக்கு முயன்றாா். இதில் மகள் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் சம்பை கிராமத்தை சோ்ந்தவா் பிரபு. கட்டுமானத் தொழிலாளியா... மேலும் பார்க்க