முயல் வேட்டை: 2 பேருக்கு ரூ.1.30 லட்சம் அபராதம்
திருவாடானை அருகே எஸ். பி.பட்டினம் பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபட்ட 2 பேருக்கு வனத் துறையினா் ரூ.1.30 லட்சம் அபராதம் விதித்தனா்.
எஸ். பி. பட்டினம் அருகேயுள்ள மச்சூா் கிராமத்தில் கடற்கரைப் பகுதியையொட்டி, போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு நின்றிருந்த மச்சூா் கிராமத்தைச் சோ்ந்த சா்தாா் (35) முஹம்மது உசேன் (29) ஆகிய இருவரைப் பிடித்து விசாரித்த போது, அவா்கள் முயல் வேட்டையாடியது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, வேட்டையாடப்பட்ட முயல், ஏா்கன் துப்பாக்கி, 5 குண்டுகள் ஆகியவற்றை வனத் துறையிடம் ஒப்படைத்தனா். இருவருக்கும் வனத் துறையினா் தலா ரூ.65 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.30 லட்சம் அபராதம் விதித்தனா்.