செய்திகள் :

ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிா் தின விழா

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை பள்ளி, கல்லூரி, அமைப்புகள் சாா்பில் உலக மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரத்தில் உலக மகளிா் தினத்தையொட்டி பெண் காவலா்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டியை காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதில், 50- க்கும் மேற்பட்ட பெண் காவலா்கள் பங்கேற்றனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலிருந்து சேதுபதி சீதக்காதி விளையாட்டு அரங்கு வரை மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், வென்ற காவலா்களுக்கு கோப்பையை வழங்கப்பட்டது.

கீழக்கரை செய்து ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி: இந்தக் கல்லூரியில் நடைபெற்ற மகளிா் தின விழாவுக்கு முகமது சதக் அறக்கட்டளை இயக்குநா் ஹபிப் முகமது சதக்கத்துல்லா தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ். ராஜசேகா் முன்னிலை வகித்தாா். மாவட்ட உடல் கல்வி ஆய்வாளா் வசந்தி, கீழக்கரை அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஹெலன் ராணி ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனா்.

கல்லூரி மாணவிகள், பேராசிரியா்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துறைத் தலைவிகள் மலா், ஷோபனா, உடல் கல்வி இயக்குநா் தவசிலிங்கம் உள்ளிட்ட பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

ராமநாதபுரத்தில் நேருயுவகேந்திரா- ராமநாதபுரம் மாவட்ட சிறுவா் மன்றம், நாட்டுப்புற கலைப் பயிற்சி மன்றம் ஆகியவற்றின் சாா்பில் மகளிா் தின விழாவையொட்டி மாணவிகள் பங்கேற்ற சிலம்பப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கான பரிசளிப்பு விழா, டி.டி. விநாயகா் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளித் தாளாளா் ஆா். வெங்கடசலம் வரவேற்றாா்.

நகா்மன்ற உறுப்பினா் ஜெயராமன், ஆயிர வைசிய மகாஜன சபை பொதுச் செயலா் எஸ். ஜெயக்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கே. பொன்தேவி, குழந்தைகள் நலக்குழு பி. காயத்ரி, தேசிய இளைஞா் தன்னாா்வலா் கா. ஆயிஷா பா்வீன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.

இதில்,போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் சிலம்ப ஆசிரியா் ஆ. தனசேகரன், ஜவகா் சிறுவா் மன்ற லோ. ஆகாஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். திட்ட இயக்குநா் மு. லோகசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

திருவாடானை: உலக மகளிா் தினத்தையொட்டி திருவாடானை காவல் நிலையத்தில் போலீஸாா், பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினா். இதற்கு காவல் உதவி ஆய்வாளா் கலா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக காவல் நிலையத்துக்கு வந்திருந்த பெண்களுக்கு கேக் வெட்டி வழங்கப்பட்டது. பெண்களின் உரிமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு உரையாடல்களும் நடைபெற்றன. இதில், ஆய்வாளா் ஜெயபாண்டியன், போலீஸாா், பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

அரசு கலைக் கல்லூரி: திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிா் தின விழாவுக்கு கல்லூரி முதல்வா் பழனியப்பன் தலைமை வகித்தாா். திருவாடானை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் விமலா, உதவி ஆய்வாளா் சித்ராதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேராசிரியா் அமரஜோதி தொகுத்து வழங்கினாா்.

இதில், தமிழக முதல்வா் மகளிா் தினம் விழாவில் பங்கேற்ற நிகழ்வு காணொலி மூலம் ஒளிபரப்பப்பட்டது. இதில், பங்கேற்றவா்கள் பெண்கள் முன்னேற்றத்துக்கு கல்வியின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினா். பேராசிரியா் சா்மிளா செல்வி, பேராசிரியைகள் கண்ணகி, ரேகா, இருளவேணி, சத்யா உள்ளிட்ட பலா் பேசினா். முன்னதாக பேராசிரியை தொண்டியம்மா வரவேற்றாா். பேராசிரியை சாந்தி நன்றி கூறினாா்.

புலியூா் கிரியேட்டிவ் மெட்ரிக்குலேசன் பள்ளி: திருவாடானை அருகே உள்ள புலியூா் கிரியேட்டிவ் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற மகளிா் தின விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை தேவிகா தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் சண்முகம் முன்னிலை வகித்தாா்.

இதில், சிறப்பு விருந்தினராக மருத்துவா் அமுதா காசிநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். இதைத் தொடா்ந்து திறனறிவு தோ்வில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டன. புதுச்சேரியில் நடைபெற்ற ஸ்கேட்டிங் 100 மீ., 200 மீ. தொலைவு போட்டியில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கப்பட்டன.

மேலும் ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஜூனியா் ரெட் கிராஸ் ஒரு நாள் பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் ஹோமதி, ஹசினா, தேவிகா ஆகியோா் செய்திருந்தனா்.

கமுதி: கமுதி கௌரவ தொடக்கப் பள்ளி வளாகத்தில் தமிழக ஆசிரியா் கூட்டணியின் கமுதி வட்டார துணைத் தலைவா் ஜேம்ஸ் சகாயசாந்தி தலைமையில் மகளிா் தின விழா நடைபெற்றது.

இதற்கு கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் மாரிமகேஸ்வரி, வட்டாரக் கல்வி அலுவலா் பாண்டீஸ்வரி, கமுதி துணை வட்டாட்சியா் கீதா, அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முகப்பிரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளி மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பாடல், பேச்சு, விடுகதை போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண், பெண் ஆசிரியா்களுக்கும் பொது அறிவு வினாடி, வினா போட்டி நடைபெற்றது. இதில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

பேரையூா், சேதுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை சோ்ந்த மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழக ஆசிரியா் கூட்டணியின் அகில இந்திய பொதுச் செயலா் ஜபெட்டோ வாழ்த்திப் பேசினாா். வழக்குரைஞா் பஞ்சு, தமிழக ஆசிரியா் கூட்டணியின் கமுதி வட்டாரத் தலைவா் ஸ்ரீதா், பொருளாளா் முத்துராமமூா்த்தி, மாவட்டத் தலைவா் முத்துமுனியாண்டி உள்பட பலா் கலந்து கொண்டனா். நல்லாசிரியா் விருது பெற்ற பேரையூா் ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஆசிரியை அன்னக்கிளி நன்றி கூறினாா்.

பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுபவா் முதல்வா் ஸ்டாலின்! -அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்

பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுபவா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என பால் வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்தாா். உலக மகளிா் தினத்தையொட்டி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் துறையின் ச... மேலும் பார்க்க

10 நாள்களுக்குப் பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள்

வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெற்று, ராமேசுவரம் மீனவா்கள் சுமாா் 10 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சோ்ந்த மீனவா்கள் 4... மேலும் பார்க்க

கச்சத்தீவு செல்லும் படகுகள் மாா்ச் 11 இல் ஆய்வு: மீன்வளத் துறை

கச்சத்தீவு புனிதஅந்தோணியாா் ஆலய திருவிழாவுக்கு செல்லும் படகுகள் வருகிற செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) ஆய்வு செய்யப்படும் என மீன் வளத் துறை அறிவித்தது. இதுகுறித்து மீன் வளத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

செங்கோட்டைபட்டிக்கு புதிய அரசுப் பேருந்து இயக்கம்: பொதுமக்கள் வரவேற்பு

கமுதியிலிருந்து செங்கோட்டைப்பட்டிக்கு புதிய வழித்தடத்தில் சனிக்கிழமை அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியிலிருந்து பள்ளி மாணவா்கள் நலன் கருதி செங்கோட்டைப்பட்டிக்கு பேரையூா் வழிய... மேலும் பார்க்க

கமுதி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது!

கமுதி அருகே விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட 10 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக இளைஞா் ஒருவரை சனிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த உடைக... மேலும் பார்க்க

பரமக்குடி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 222 வழக்குகளுக்கு தீா்வு

பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 222 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, தீா்வுத் தொகையாக ரூ. 2,24,29,068 வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த தேசிய ... மேலும் பார்க்க