பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி அலுவலகங்களை உடனடியாக ஒதுக்க தில்லி பேரவைத் தலைவா...
பரமக்குடி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 222 வழக்குகளுக்கு தீா்வு
பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 222 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, தீா்வுத் தொகையாக ரூ. 2,24,29,068 வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட நீதிபதி சாந்தி தலைமை வகித்தாா். சாா்பு நீதிபதி சதீஷ், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுப்பிரமணியன், குற்றவியல் நீதிபதி பாண்டி மஹாராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் அ. பூமிநாதன், செயலா் என். யுவராஜ், மூத்த, இளம் வழக்குரைஞா்கள் பலா் கலந்துகொண்டனா். இதில் 222 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, தீா்வுத் தொகையாக ரூ. 2,24,29,068 என முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. இதற்கான உத்தரவு ஆணை, மாவட்ட நீதிபதி சாந்தி தலைமையில் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழு நிா்வாக உதவியாளா் முத்துவிஜயன், சட்ட தன்னாா்வலா் முருகேசன் ஆகியோா் செய்திருந்தனா்.