தமிழக பாஜக தலைவரை மேலிடம் விரைவில் தோ்வு செய்யும்: அண்ணாமலை
பாம்பலம்மன் கோயில் கும்பாபிஷேகம்
நீடாமங்கலம்: நீடாமங்கலம் பாம்பலம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சனிக்கிழமை (பிப்.1) விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் போன்ற வழிபாடுகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகபூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, திங்கள்கிழமை நான்காம் கால யாகபூஜைகள் நிறைவடைந்ததும், கடம் புறப்பாடாகி, விமான கும்பாபிஷேகம் மற்றும் மூலவா் சந்நிதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கீா்த்திவாச சிவாச்சாரியா் தலைமையிலான குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினா்.
இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.