பஞ்சாப்: மார்ச் மாதத்தில் மட்டும் போதைப்பொருள் வழக்குகளில் 4,706 பேர் கைது
பார்மா பங்குகள் 11 சதவிகிதத்திற்கு மேல் சரிவுடன் முடிவு!
புதுதில்லி: டிரம்ப் நிர்வாகம் விரைவில் மருந்து இறக்குமதி மீதான வரிகளை அறிவிக்க உள்ளதாக வெளியான தகவலையடுத்து, மருந்து நிறுவனங்களின் பங்குகள் இன்று 11 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்து முடிந்தது.
மருந்துகள் மற்றும் குறைக்கடத்தி மீதான வரிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளதாகவும், மருந்து இறக்குமதி மீதான நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இருக்கும் என்றும் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா அதிக இறக்குமதி வரிகளை விதிக்கிறது என்று கூறி இந்தியா மீது 26 சதவிகித பரஸ்பர வரிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.
இன்றைய பங்குச் சந்தையில், மார்க்சன்ஸ் பார்மாவின் பங்கு 11.18% சரிந்து ரூ.207 ஆகவும், லாரஸ் லேப்ஸ் 7.40% சரிந்து ரூ.574.45 ஆகவும், ஷில்பா மெடிகேர் 6.56% சரிந்து ரூ.632 ஆகவும், இப்கா லேப்ஸ் 6.53% சரிந்து ரூ.1,399.15 ஆகவும், அரபிந்தோ பார்மா 5.96% சரிந்து ரூ.1,106 ஆகவும், லூபின் 5.85% சரிந்து ரூ.1,972 ஆகவும், கிளாண்ட் பார்மாவின் பங்குகள் 5.51% சரிந்து ரூ.1,475.90 ஆகவும், அஜந்தா பார்மா 5.40% சரிந்து ரூ,2,480.05 ஆகவும், சிப்லா 5.32% சரிந்து ரூ.1,415.55 ஆகவும், பயோகான் 5.09% சரிந்து ரூ.327.95 ஆகவும், வோக்ஹார்ட் 5% சரிந்து ரூ.1,347.55 ஆகவும், டிவிஸ் லேபாரட்டரீஸ் செக்யூரிட்டீஸ் 4.70% சரிந்து ரூ.5,490.75 ஆகவும், டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ் 3.60% சரிந்து ரூ.1,109.75 ஆகவும், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் 3.43% சரிந்து ரூ.1,709.40 ஆகவும் இருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் ஹெல்த்கேர் குறியீடு 1,339.21% சரிந்து 40,531.58 புள்ளிகளாக உள்ளது.
முன்னதாக டிரம்ப் நிர்வாகம் பரஸ்பர கட்டணக் அறிவிப்பிலிருந்து மருந்துகள் மற்றும் குறைக்கடத்திகளுக்கு விலக்கு அளித்திருந்தது. அதன் அடிப்படையில், நேற்று (வியாழக்கிழமை) மருந்து நிறுவனங்களின் பங்குகள் 7% வரை லாபத்துடன் முடிவடைந்தன.
மருந்து துறை மீது வரி விதிப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இது இந்திய மருந்து நிறுவனங்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு!