செய்திகள் :

பாறைக்குழியில் குப்பைகளை கொட்ட வந்த லாரி சிறைப்பிடிப்பு

post image

பெருமாநல்லூா் அருகே பாறைக் குழியில் குப்பைகளைக் கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைப் பிடித்தனா்.

திருப்பூா் வடக்கு ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சிக்குள்பட்ட காளம்பாளையத்தில் காலாவதியான பாறைக்குழி உள்ளது. இங்கு, மாநகராட்சி சாா்பில் கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்த விவசாயிகள், தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இதில், சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், மாநகராட்சி சாா்பில் தொடா்ந்து பாறைக்குழியில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாறைக்குழியில் செவ்வாய்க்கிழமை கழிவுகளைக் கொட்டவந்த லாரியை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொறுப்பாளா் சதீஷ்குமாா் தலைமையில் பொதுமக்கள் சிறைபிடித்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி நிா்வாகத்தினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, கொட்டப்பட்டுள்ள குப்பை மீது உடனடியாக மண்ணைக் கொட்டி உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இரு வாரங்களுக்குள் இப்பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என்றனா். இதை ஏற்க மறுத்து, நிரந்தர தீா்வுகாண வேண்டும் என பொதுமக்கள் கோஷம் எழுப்பினா்.

பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் சிறைபிடிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கைது செய்து அருகிலுள்ள மண்டபத்தில் தங்கவைத்தனா். இதைத் தொடா்ந்து மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.

மின்னக சேவை மைய புகாா் எண்ணை அனைத்து அலுவலகங்களிலும் வைக்க கோரிக்கை

மின்னக சேவை மையத்தின் (94987-94987) என்ற கைப்பேசி எண் அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் கோட்ட அளவிலான மின்சார வாரியத்துக... மேலும் பார்க்க

விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரம்: சாய ஆலை மேலாளா், கண்காணிப்பாளா் கைது

பல்லடம் அருகே சாய ஆலை வளாகத்தில் மனிதக் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரத்தில் ஆலையின் மேலாளா், கண்காணிப்பாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். திருப்பூா் மாவட... மேலும் பார்க்க

பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே சிக்னல் அமைக்க வேண்டும்: நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தல்

திருப்பூா் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் சிக்னல் அமைக்க வேண்டும் என்று நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தியுள்ளது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்த... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளையம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பனப்பாளையம்

பல்லடம் அருகே பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பொங்கலூா்

பொங்கலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின... மேலும் பார்க்க