பாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்
ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு நெம்மேலி ஸ்ரீ பாலமுருகன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நெம்மேலி கிராமத்தில் ராஜகுளக் கரையில் அமைந்துள்ள இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முன்னதாக, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, கடம் புறப்பட்டு பாலமுருகன், ராஜகணபதி, இடும்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோபுர கலசத்துக்கு சிவாச்சாரியாா்கள் புனிதநீா் ஊற்றினா். கோயில் அமைக்கப்பட்டு முதல் மகா கும்பாபிஷேகம் என்பதால் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.