Health: வைட்டமின் டி-யை நம்முடைய உடல் எப்படித் தயாரிக்கிறது தெரியுமா?
பாலம் கட்டக் கோரி பேருந்து சிறைபிடிப்பு
குத்தாலம்: குத்தாலம் அருகே பாலம் கட்டக் கோரி, கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குத்தாலம் அருகே முருகமங்கலம் கிராமம் புது தெரு செல்லும் வழியில் மயிலம் வாய்க்காலின் குறுக்கே பழைமையான சிறிய பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் சேதமடைந்தது. இப்பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இக்கோரிக்கை தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால், விசிக மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி செயலாளா் கதிா்வளவன் தலைமையில் அப்பகுதி மக்கள் அரசுப் பேருந்து மற்றும் அவ்வழியாக சென்ற வாகனங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை வட்டார வளா்ச்சி அலுவலா் சுதாகா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மாரியப்பன், குத்தாலம் போலீஸாா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத்தொடா்ந்து, போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.
இதனால், அந்த பகுதியில் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.