Ajithkumar: ``அவர் இந்த விஷயத்துக்கு உதாரணம்"- அஜித் குறித்து நெகிழ்ந்த மணிகண்டன...
பாலாற்றங்கரைக்கு எழுந்தருளிய சொன்னவண்ணம் செய்த பெருமாள்!
காஞ்சிபுரம் சொன்னவண்ணம் செய்த பெருமாள் சேஷ வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் ஓரிக்கை பகுதியில் உள்ள பாலாற்றங்கரைக்கு வெள்ளிக்கிழமை எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில். இக்கோயில் உற்சவா் ஆண்டு தோறும் தை மாத மக நட்சத்திரத்தன்று காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள பாலாற்றங்கரைக்கு எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
நிகழாண்டு தை மாத மக நட்சத்திரத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவா் சொன்னவண்ணம் செய்த பெருமாள் சேஷ வாகனத்தில், ராஜ அலங்காரத்தில் ஆலயத்திலிருந்து புறப்பட்டாா்.
திருக்கச்சி நம்பிகள் தெரு, வரதராஜ பெருமாள் கோயில் சந்நிதி தெரு, சதாவரம், அண்ணா குடியிருப்பு ஆகிய பகுதிகள் வழியாக சென்று பின்னா், ஓரிக்கை பகுதி பாலாற்றங்கரைக்கு எழுந்தருளினாா். செல்லும் வழி நெடுகிலும் பக்தா்களால் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
பாலாற்றங்கரையில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படியில் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பின்னா் உற்சவா் சொன்னவண்ணம் செய்த பெருமாள் சந்நிதிக்கு எழுந்தருளினாா்.
ஆலயத்துக்கு பெருமாள் வந்து சோ்ந்ததும் திருமழிசை ஆழ்வாா் சாற்றுமுறை உற்சவம் நடைபெற்றது.