செய்திகள் :

`பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவுநீர்' 3 மாவட்ட கலெக்டர்களிடம் காட்டமான உச்ச நீதிமன்றம்

post image

தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக செல்லும் பாலாற்றில், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவுகளை கலப்பதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இதற்கு உரிய தீர்வு வழங்க கோரி வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு என்ற அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன் மீதான விசாரணையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி. பார்திவாலா, ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி விரிவான தீர்ப்பு வழங்கி வழக்கை ஒத்திவைத்திருந்தது.

அந்தத் தீர்ப்பில், பாலாற்றில் கழிவு நீரை திறந்து விடும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உடனடியாக மூடப்பட வேண்டும் என்றும், இதுவரை இந்த தொழிற்சாலைகளால் ஏற்பட்ட மாசு காரணமாக பாதிக்கப்பட்ட அந்தந்த பகுதியில் மக்களுக்கு தொழிற்சாலைகளிடமிருந்து அபராதம் வசூலித்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாலாறு
பாலாறு

இந்த நிலையில், வழக்கு மீண்டும் மீண்டும் இன்று அதே அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியாளர்கள், மாநில மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகளும் நேரில் ஆஜராகினர்.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பாலாற்றில் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முறையாக அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும், மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டு அவை மூடப்படுவதாகவும் தெரிவித்தார்.

பின்னர், ஆஜராகியிருந்த மாவட்ட ஆட்சியர்களிடம், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு, வேலூர் மாவட்ட ஆட்சியர், ஆற்றில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பது தொடர்பான புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளிடம் விளக்கம் கேட்பதாகவும், கழிவுநீர் கலப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த தொழிற்சாலைகள் உடனடியாக மூட உத்தரவிடப்படுவதாகவும், அதற்கென சிறப்பு அதிகாரிகள் கொண்ட படையை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், "வெறும் தொழிற்சாலை கழிவுகள் மட்டும் இங்கு பிரச்னை கிடையாது. வீடுகள் உள்ளிட்டவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலப்பது என்பதும் பெரும் பிரச்னை தான். அதைத்தடுக்க உங்கள் மாவட்டத்தில் என்ன செய்திருக்கிறீர்கள்?" எனக் கேட்டனர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அக்கேள்விக்கு, தங்களது மாவட்டத்தில் ஒரு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இருப்பதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சொன்னபோது, "அது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது" என நீதிபதி மீண்டும் கேள்வியெழுப்ப, "20 வருடங்களுக்கு முன்பு" என ஆட்சியர் பதிலளித்தார்.

ஆனால், அந்தப் பதிலில் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், "20 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஒரு சுத்திகரிப்பு நிலையத்தைத்தான் தற்பொழுதும் பயன்படுத்தி வருகிறீர்களா?

இந்த இடைப்பட்ட காலத்தில் எவ்வளவு மக்கள்தொகை உயர்ந்திருக்கிறது அதற்கு ஏற்ற வகையில் கட்டமைப்புகளை தரம் உயர்த்த வேண்டாமா? என மேலும் கேள்வி எழுப்பினர்.

அதைதொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரிடம், "உங்களது மாவட்டத்தில் எத்தனை சுத்திகரிப்பு நிலையம் இருக்கிறது?" எனக் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு, "ஒன்று கூட இல்லை" என மாவட்ட ஆட்சியர் பதில் சொன்னபோது கோபமடைந்த நீதிபதிகள், "இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஒரு சுத்திகரிப்பு நிலையம் கூட இல்லாதது கவலையளிக்கிறது.

அப்படியென்றால் அனைத்து கழிவுநீரும் நேரடியாக ஆற்றில் கலந்து விடப்படுகிறதா? இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியாது உங்கள் மாவட்டத்தின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அதிகாரி நீங்கள்தான்.

உங்களாலேயே இதைத்தடுக்க எதுவும் செய்ய முடியவில்லை என்றால் வேறு யார் செய்ய முடியும்?

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

உங்களது வீடும் அந்த மாவட்டத்தில்தான் இருக்கிறது. இன்றும் நமது நாட்டில் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக ஆற்று நீரைத்தான் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

அதைப் பற்றி எல்லாம் உங்களுக்கு கவலை இல்லையா? ஆயிரக்கணக்கான லிட்டர் கழிவுநீர் தினம்தோறும் இப்படி ஆற்றில் கலந்து கொண்டே இருந்தால் அது ஆறாகவே இருக்காது.

ஆனால், அந்த மோசமான நீரை குடிப்பவர்கள் நமது மக்கள் தானே அவர்களைப் பார்த்தால் உங்களுக்கு பாவமாக இல்லையா? என நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.

மேலும் நீதிபதிகள், "உங்களைக் குறை சொல்ல வேண்டும் என்பது எங்களது நோக்கம் கிடையாது. இது இயற்கை சார்ந்த விஷயம்.

இயற்கையை நீங்கள் பாதுகாக்கவில்லையென்றால் இயற்கை நிச்சயம் ஒருநாள் உங்களை பலி வாங்கிவிடும். எனவே இயற்கையைப் பாதுகாக்க என்னென்ன தேவையோ அவையனைத்தையும் செய்யுங்கள்.

எந்த சமரசமும் செய்யாதீர்கள், யாரையும் விடாதீர்கள். இயற்கையை அழிக்க நினைப்பவர்களை நீங்கள் தண்டிக்கவில்லையென்றால் இயற்கை உங்களை அழித்துவிடும்.

உத்தரவு
உத்தரவு

இதை உங்கள் மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொள்ளுங்கள். இந்த விவகாரத்தில் அனைவரது கூட்டு முயற்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் இருக்கக்கூடிய அத்தனை அமைப்புகளுடனும் இணைந்து வேலை பாருங்கள்.

இதற்கான ஒரு உறுதியான நடவடிக்கை எடுங்கள். மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

என்ன நடவடிக்கை எடுக்கிறீர்களோ அதை எங்களுக்கு அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள்" என்று கூறி விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

Stray Dogs: "நாய்களைப் பாதிக்கும்; ஒரே வழி..." - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பீட்டா அமைப்பு எதிர்வினை

தெரு நாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.நேற்றைய விசாரணையில், ``தெரு நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை, விலங்குகள் நல ஆர்வல... மேலும் பார்க்க

Roundup: தீவிரமடையும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் டு கர்நாடக அமைச்சரின் ராஜினாமா வரை|11.8.2025

ஆகஸ்ட் 11 முக்கியச் செய்திகள்!எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் 11 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வ... மேலும் பார்க்க

"அதிமுக ஆட்சிக்கு வந்தால் தூய்மைப்பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்"-எஸ்.பி.வேலுமணி வாக்குறுதி

பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், மாநகராட்சி சுகாதாரப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 11-வது நாளாகத... மேலும் பார்க்க

தெருநாய்க்கடி: "போன உயிரை விலங்குகள் நல ஆர்வலர்களால தர முடியுமா?"- அதிரடி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

தெருநாய்க்கடி மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோய் உயிரிழப்புகள் தொடர்பாக பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.அந்தச் செய்தியின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் கடந்த மாத இறுதியில் தாமாக முன்வந்து... மேலும் பார்க்க

பெங்களூரு: முடிவுக்கு வந்த நீண்டநாள் காத்திருப்பு; மெட்ரோ மஞ்சள் பாதையைத் திறந்து வைத்தார் பிரதமர்!

பெங்களூருவின் போக்குவரத்து வரலாற்றில் நேற்றைய தினம் ஒரு முக்கிய நாள். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ‘மஞ்சள் மெட்ரோ லைன்’ நேற்று (ஆகஸ்ட் 10, 2025) பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த... மேலும் பார்க்க

`2026 தேர்தல்... மேற்கு மண்டலத்தில்தான் திமுக-வின் அத்தியாயம் தொடங்கும்' - முதல்வர் ஸ்டாலின்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு முடிவுற்ற பணிகள் மற்றும் புதிய திட்டப் பணிகளைத் திறந்து வைத்து பேசுகையில... மேலும் பார்க்க