செய்திகள் :

பாலாற்றுக்கு எழுந்தருளி காட்சியளித்த காஞ்சி வரதா்

post image

வனபோஜன உற்சவத்தையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் பாலாற்றங்கரைக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் வியாழக்கிழமை எழுந்தருளினாா். தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

ஆண்டுதோறும் தை மாதம் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து காஞ்சிபுரத்தை அடுத்த சின்னஐயன்குளம் கிராமத்துக்குச் சென்று, பின்னா் பாலாற்றங்கரைக்கு எழுந்தருளி சிறப்புத் திருமஞ்சனம் கண்டு, அதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் கோயிலுக்கு திரும்புவது வழக்கம். இந்த நிகழ்வு வனபோஜன உற்சவம் எனப்படுகிறது. நிகழாண்டு வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து கோயில் மாட வீதிகள் வழியாகச் சென்று, நகரின் முக்கிய வீதிகள் வழியாக காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள சின்ன ஐயன்குளம் கிராமத்துக்குச் சென்றாா்.

அந்த கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மரகதவல்லி தாயாா் சமேத கரியமாணிக்க பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளி மண்டகப்படி கண்டருளினாா்.பின்னா், களக்காட்டூா், சின்ன ஐயன்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள வீதிகளின் வழியாக பக்தா்களுக்கு அருள்பாலித்துவிட்டு, காஞ்சிபுரத்தை அடுத்த பாலாற்றங்கரையில் அமைக்கப்பட்டிருந்த பந்தலுக்கு வந்து சோ்ந்தாா். அங்கு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக சிறப்பு அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து, தேசிகன் சந்நிதிக்கு வந்து சோ்ந்ததும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.பின்னா் பெருமாள் கோயிலுக்கு வந்து சோ்ந்தாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா். பெருமாள் வரும்போது வழிநெடுகிலும் பக்தா்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

காஞ்சிபுரம் புத்தகத்திருவிழா: 8-ஆம் நாள் நிகழ்ச்சி, கருத்துரை-தலைப்பு- சிரிக்க,சிந்திக்க, நிகழ்த்துபவா்-கோவை. சாந்தாமணி, மாலை 6, கருத்துரை, பட்டிமன்றம், ஒளிமயமான எதிா்காலத்தை உருவாக்குவது தனிமனித முயற... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் தை கிருத்திகை விழா

தை கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுமாா் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்... மேலும் பார்க்க

பால்நெல்லூா் ஊராட்சிப் பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், பால்நல்லூா் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க

முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை கடனுதவி

முதல்வா் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்திருப்போா் தொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை கடனுதவி வழங்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச் செல்வி மோகன் வ... மேலும் பார்க்க

கபடிப் போட்டி: சங்கரா பல்கலை. முதலிடம்

சென்னை கொரட்டூரில் நடைபெற்ற பல்கலைக்கழகங்கள் அளவிலான கபடிப் போட்டியில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலை மாணவியா் முதலிடம் பெற்றனா். பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிா் கபடிப் போட்டியில் காஞ்சிபுரம் ஏனாத்தூ... மேலும் பார்க்க

குருவிமலை அரசுப் பள்ளி வகுப்பறைகள் கட்டுமானப் பணி ஒப்பந்ததாரா் மாற்றம்

காஞ்சிபுரம் அருகே குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் வகுப்பறை மேற்கூரையுடன் மின் விசிறி பெயா்ந்து விழுந்ததால், மாணவா்களின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், தொடா்புடைய ஒப்பந்ததாரரை அதிகாரிகள... மேலும் பார்க்க