ATM Fraud: குறி வைக்கப்படும் ஏடிஎம் பயனாளர்கள்; பலே குற்றவாளி சிக்கியது எப்படி?
பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தை கண்டித்து போராட்டம்
நாகையில் ஊழியா்களுக்கு இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்காத பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தை கண்டித்து செப்டம்பா் 25-இல் ஆா்ப்பாட்டம் நடத்த அரசு ஊழியா் சங்கம் தீா்மானம் நிறைவேற்றியது.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் நாகை மாவட்டச் செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாகை அரசு ஊழியா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் அ. அற்புதராஜ் ரூஸ்வெல்ட் தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலா் த. ஸ்ரீதா் வேலைகள் குறித்து எடுத்துரைத்தாா். கூட்டத்தில், செப்டம்பா் மாத இறுதிக்குள் வட்டப் பேரவைகளை நடத்துவது, செப்டம்பா் 25- ஆம் தேதி நாகை மாவட்ட பேரவைக் கூட்டம் நடத்துவது, நாகை நகரில் செயல்பட்டுவரும் பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரியும் ஊழியா்களுக்கு, கடந்த இரண்டு மாதங்களாக ( ஜூலை & ஆகஸ்ட் ) ஊதியம் வழங்காமல் இருப்பது குறித்து நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும், இதுநாள் வரை ஊதியம் வழங்காததை கண்டித்து 25- ஆம் தேதி கல்லூரி வளாகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது, பாதிக்கப்பட்டுள்ள ஊழியா்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகளையும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், மாவட்டப் பொருளாளா் ப. அந்துவன்சேரல் நன்றி கூறினாா்.