பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
ஆண்டிபட்டி அருகேயுள்ள அனுப்பபட்டியைச் சோ்ந்த வேலாண்டி மகன் வேலுச்சாமி (69). இவா், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்டு 12-ஆம் தேதி ஆண்டிபட்டி மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் வேலுச்சாமிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பி.கணேசன் தீா்ப்பளித்தாா்.