செய்திகள் :

பாலியல் வன்கொடுமை: அலாகாபாத் உயா்நீதிமன்ற சா்ச்சை கருத்து ‘மனிதத்தன்மையற்றது’ -உச்சநீதிமன்றம் அதிருப்தி

post image

பாலியல் வன்கொடுமை குறித்து விளக்கமளித்து, அலாகாபாத் உயா்நீதிமன்றம் அண்மையில் தெரிவித்த சா்ச்சை கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்தது.

இக்கருத்துகள் மனிதத்தன்மையற்றது; இரக்க சிந்தனையில்லாதது என்று உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மேலும், தாமாக முன்வந்து விசாரிக்கப்படும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு, உத்தர பிரதேச அரசு மற்றும் அலாகாபாத் உயா்நீதிமன்ற வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினா் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்ச் நகரில் கடந்த 2021-இல் 14 வயது சிறுமியை ‘லிஃப்ட்’ கொடுப்பது போல் அழைத்துச் சென்று, பவன், ஆகாஷ் ஆகியோா் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டனா். இது தொடா்பாக அவா்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தங்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு எதிராக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனா். இந்த மனு மீது கடந்த மாா்ச் 17-ஆம் தேதி நீதிபதி ராம் மனோகா் நாராயண் மிஸ்ரா அளித்த தீா்ப்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை எது என்பது குறித்து சா்ச்சைக்குரிய விளக்கம் அளிக்கப்பட்டது.

‘பெண்ணின் உடல் பாகத்தைப் பற்றி இழுப்பதோ, ஆடை நாடாவை வலுக்கட்டாயமாக அவிழ்ப்பதோ பாலியல் வன்கொடுமை ஆகாது’ என்று குறிப்பிட்டு, குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் இந்திய தண்டனைச் சட்டம் 354-பி (ஆடைகளைக் களையும் நோக்கத்துடன் தாக்குவது), போக்ஸோ சட்டத்தின் 9/10 (தீவிரமான பாலியல் தாக்குதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தாமாக முன்வந்து விசாரணை: அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் மேற்கண்ட விளக்கம் நாடு முழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தை பெண்கள் அமைப்பு ஒன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் கவனத்துக்கு கொண்டுவந்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

நீதிபதிகள் பி.ஆா்.கவாய், அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் முன் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் கூறுகையில், ‘அலாகாபாத் உயா்நீதிமன்ற தீா்ப்பின் 21, 24, 26 ஆகிய பத்திகளில் இடம்பெற்றுள்ள சில கருத்துகள் சட்டத்தின் கோட்பாடுகளுக்கு முற்றிலும் பொருந்தாதவை; தீா்ப்பை எழுதியவரின் இரக்க சிந்தனையற்ற- மனிதத்தன்மையற்ற அணுகுமுறையின் வெளிப்பாடாக உள்ள இக்கருத்துகளுக்கு தடை விதிக்கிறோம். இதன் மூலம் எவரும் சட்ட நிவாரணம் கோர இக்கருத்துகளைப் பயன்படுத்த முடியாது.

மிக தீவிரமான விவகாரம்: சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு எதிராக கடுமையான வாா்த்தைகளை பயன்படுத்துவது வருத்தமளிக்கிறது. அதேநேரம், இது மிக தீவிரமான விவகாரம். வழக்குகளை ஒதுக்கும் நிா்வாக அதிகாரம் கொண்டவா் என்ற அடிப்படையில் அலாகாபாத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி தரப்பில் சில நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம். இந்த விவகாரத்தை முழுமையாக ஆராய்ந்து, அவா் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தினா்.

மேலும், அலாகாபாத் உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பிற மனுக்களுடன் அடுத்தக்கட்ட விசாரணையை ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

பாலியல் வன்கொடுமை தொடா்பான அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதற்கு தேசிய மகளிா் ஆணையம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

விமான நிலையம் செல்லும் வழியில் ஜெர்மன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!

ஹைதராபாத்தில் விமான நிலையம் செல்லும் வழியில் ஜெர்மன் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். ஜெர்மனைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் ஹைதராபாத் நகரத்திற்கு சுற்றுலா வந்திருந்தார். தனது நண்பர்க... மேலும் பார்க்க

இன்றுமுதல் வருமான வரி மாற்றங்கள் அமல்: தெரிந்துகொள்ள வேண்டியவை!

2025-2026 நிதியாண்டின் முதல்நாளான இன்று(ஏப்ரல் 1) முதல், புதிய வருமான வரி விதிப்பு முறையின்கீழ் வருமான வரிச் சட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பல மாற்றங்கள் அமலாகின்றன. முக்கியமாக, ரூ. 12 லட்சம் வரை ஆண்ட... மேலும் பார்க்க

கண்ணி வெடிகளால் சூழப்பட்ட ஜார்க்கண்ட் காடுகள்!

ஜார்க்கண்ட் காடுகளில் மாவோயிஸ்டுகள் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அவர்கள் வைத்த கண்ணி வெடிகள் பாதுகாப்புப் படையினருக்கு சவாலை ஏற்படுத்துகின்றன. பாதுகாப்புப் படையினர் காடுகளுக்குள் வந்து தங்களைக் கைது ... மேலும் பார்க்க

2026 மார்ச் 31-க்குள் நக்சல் இயக்கம் வேரோடு அழிக்கப்படும்: அமித் ஷா

2026 மார்ச் 31-க்குள் நக்சல் இயக்கம் வேரோடு அழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமித் ஷா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “நக்சல் இல்லா பாரதத்தை கட்டியெழுப்ப... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த எம்புரான் சர்ச்சை: மக்களவை ஒத்திவைப்பு!

மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்து அவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.நாடாளுமன்ற இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மூ... மேலும் பார்க்க

ஆந்திரம்: 26 மண்டலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை!

ஆந்திரப் பிரதேச மாநிலம் முழுவதும் இன்று(ஏப்ரல் 1) 26 மண்டலங்களில் வெப்ப அலை வீசும் என அந்த மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக அதிகப்படியான வெய்யில் கொளுத்தி... மேலும் பார்க்க