செய்திகள் :

“பாலியல் வன்கொடுமை போல் ஆணவக்கொலைகளுக்கும் கடும் தண்டனை வேண்டும்” - இயக்குநர் ஜெயபிரகாஷ் பேட்டி

post image

பிப்ரவரி-14 காதலர் தினத்தையொட்டி திரைக்கு வருகிறது இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனின் ‘காதல் என்பது பொதுவுடைமை’.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் இயக்குநர் ஜியோ பேபி தயாரித்திருக்கும் முதல் தமிழ்ப்படம். கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பாராட்டுகளைக் குவித்ததால் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியிருக்கிறது படம்.

குறிப்பாக, ’லென்ஸ்’, ’தலைக்கூத்தல்’ படங்களின் மூலம் சமூக கருத்துகளைச் சொல்லி பெரும் பாராட்டுகளை அள்ளிய இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் தற்போது, ‘காதல் என்பது பொதுவுடைமை’ மூலம் மற்றுமொரு சமூக கருத்தோடு களத்தில் இறங்கியிருக்கிறார். அவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தேன்...

“தமிழ் சினிமாவுல ஒரு குயர் (Queer) படம் காதலர் தினத்தன்று வெளியாவது இதுதான் முதல் முறை. இதையே நான் ஒரு சாதனையா பார்க்கிறேன். காதல் என்பது பொதுவானது. யார் யாரைக் காதலிப்பாங்கன்னு சொல்லமுடியாது. இந்த பாலினத்து மேலதான் காதல் வரும்னு சொல்லக்கூடாது. உலகமே அன்பாலும் காதலாலும் நம்பிக்கையாலும்தான் இயங்கிக்கிட்டிருக்கு. அதனாலதான், இளையராஜா சாரோட ‘காதல் என்பது பொதுவுடைமை...’ பாட்டை டைட்டிலா வெச்சோம். அது, சரியா பொருந்திப்போச்சு.

இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்
இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்

அதேநேரம், இது ஒரு குடும்பப் படம். அதற்குள் ஒரு சப்ஜெக்டா தன்பாலின ஈர்ப்பு விஷயம் வரும். பெற்றோர்களும் படத்துல ஹீரோக்களா தெரிவாங்க. எல்லாருடைய பாயிண்ட் ஆஃப் வியூவிலேர்ந்தும் யோசிச்சு எழுதி, படத்தை எடுத்திருக்கேன். விஜய்யோட காதலுக்கு மரியாதை மாதிரி இதுவும் ரொம்ப காதலுக்கு மரியாதை கொடுக்கிற படமா இருக்கும்” என அழுத்தமான நம்பிக்கயோடு பேசுகிறார் இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

“படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே கவனம் ஈர்த்துள்ளதே? ஒன்லைன் என்ன?”

“காதல்தான். ஒரு பெண், தன்னோட அம்மாக்கிட்ட காதலிக்கிற விஷயத்தை சொல்றா. அவங்க ஒரு மாடர்ன் அம்மா. லவ்வரை, வீட்டுக்குச் சாப்பிட கூட்டிக்கிட்டு வரச் சொல்றாங்க. அங்க ஒரு எதிர்பார்க்காத திருப்பம் ஏற்படுது. அந்த காதலுக்கு அந்த பெண்ணோட அம்மா சம்மதிக்கிறாங்களா? இல்லையா? என்ன நடக்குது? என்பதுதான் படத்தின் ஒன்லைன். என்னோட முதல் படமான ‘லென்ஸ்’க்கு பிறகு இந்த படத்தைத்தான் இயக்க வேண்டியிருந்தது. என்னோட மருத்துவ நண்பர், ஒருநாள் என்கிட்ட வந்து பெண்கள் டான்ஸ் வீடியோ ஒண்ணு பண்ணணும்னு சொன்னார். நான், அந்த டான்ஸ் மூலமா சமூகத்துக்கு மெசேஜ் சொல்லலாம்னு நினைச்சேன். ‘ஒரு பொண்ணு தன்னோட டான்ஸ் மூலமாக தன்னுடைய பாலினத்தை அம்மாவுக்கு வெளிப்படுத்துறா’ன்னு ஒரு கான்செப்ட் சொன்னேன். அப்போ, அவர் பயந்து பின்வாங்கி, அதையெல்லாம் என் வீட்டுலக்கூட காட்ட முடியாதுன்னு சொல்லிட்டார்.

காதல் என்பது பொதுவுடைமை
காதல் என்பது பொதுவுடைமை

அவருக்கு ஏற்பட்ட அந்தப் பயமும் தயக்கமும்தான், பாலினம் பற்றிய புரிதலை இந்த சமூகத்துக்கு இன்னும் பயமில்லாம, தயக்கமில்லாம கொண்டு போய் சேர்க்கணும்ங்குற எண்ணத்தை எனக்கு உருவாக்கினது. நம்ம யாரையும் ஜட்ஜ் பண்ண முடியாது. எல்லோருக்கும் வாழவும் காதலிக்கவும் உரிமை இருக்கு. இந்த உலகத்துல எவ்வளவு இதயங்கள் இருக்கோ, அவ்வளவு காதல்கள் இருக்குமில்லையா?!”

“லிஜோமோல் எப்படி இந்த கதைக்குள்ள வந்தாங்க?”

”இந்தக் கதைக்கு லிஜோ மோல் நடிச்சாத்தான் சரியா இருக்கும்னு உறுதியா தோணுச்சு. கதையைச் சொன்னதுமே ரொம்ப இன்ட்ரஸ்ட்டா இருக்கு. சமூகத்துக்குத் தேவையான கதை. காதலைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தக்கூடிய கதை அப்படின்னு சொல்லி, ஓகே சொல்லிட்டாங்க. நடிச்சு முடிச்சதும், ‘இந்த மாதிரி ஒரு கதையை எனக்கு கொடுத்ததுக்கு தேங்க்ஸ், எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு’ன்னு சொன்னாங்க. நடிகர் வினீத் ரொம்ப வருசத்துக்கப்புறம் தமிழ்ல நடிக்கிறார். கிட்டத்தட்ட ரீ்-இன்ட்ரொடியூசிங்னு சொல்லலாம். பிரகாஷ்ராஜ் சார் லெவலுக்கு சேஞ்ச் ஆவார். இந்தப் படத்துக்கு அப்புறம் மீண்டும் தமிழ்ல நிறைய படங்களில் நடிப்பார்.

ரோகிணி - லிஜோமோல்
ரோகிணி - லிஜோமோல்

நடிகை ரோகிணணி அவங்களோட நல்ல நடிப்பை வழங்கியிருக்காங்க. மற்றொரு நடிகை அனுஷா, நடிகை தீபா, காலேஷ் ராமானந்த்-ன்னு எல்லோரும் ரொம்ப நல்ல பெர்ஃபாமன்ஸ் கொடுத்திருக்காங்க. ஆரம்பத்துல, இந்தக் கதைல பிரகாஷ் ராஜ் சார், நடிகை ரேவதி, நடிகை பார்வதி நடிக்கவேண்டியிருந்தது. ஆனா, கடைசிநேரத்துல இந்த மாதிரி கதை வேணாம்னு தயாரிப்பாளர் பின் வாங்கிட்டார். ஒரு படைப்பாளியா எனக்கு மிக்கப்பெரிய வருத்தம்தான்”

“தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தோட ஜியோ பேபி, இந்தப் படத்தைத் தயாரிக்க எப்படி முன் வந்தார்?”

“என்னோட மஸ்கிட்டோ பிலாசபி படம் நேரடியா ஓடிடியில் வெளியானது. அந்தப் படம் ஜியோ பேபி சாருக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. அப்போ, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தோட ஷூட்டிங்கை அவர் முடிச்சிருந்த டைம். என்னை ஃபேஸ்புக்குல கான்டாக்ட் பண்ணி, ‘மஸ்கிட்டோ பிலாசபி’ படம் ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்கன்னு பாராட்டினார். அதிலிருந்து, நானும் அவரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். அதுக்கப்புறம், ’தி கிரேட் இந்தியன் கிச்சன்‘ படம் ரிலீஸ் ஆச்சு. நானும் அவரை கான்டாக்ட் பண்ணி பாராட்டினேன். ஒருநாள், எங்களோட தயாரிப்பு நிறுவனம் தமிழ்ப்படம் பண்ணலாம்னு இருக்கு. கதை ஏதாவது இருக்கான்னு கேட்டார். ’காதல் என்பது பொதுவுடைமை’ கதையைச் சொன்னேன். அவருக்கு ரொம்ப புடிச்சுப் போச்சு. இதையே, முதல் படமா பண்ணிடலாம்னு ஓகே சொல்லிட்டார்.

லிஜோமோல்
லிஜோமோல்

ஒரு தயாரிப்பாளரா அவர்கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயம்னா, கதையில எந்தவித தலையீடும் செய்யல. படம் தயாரிக்கிறேன்னு கொடுத்த வாக்கை அப்படியே காப்பாற்றினார். அதேமாதிரி, அவர் இயக்குற படங்கள் ரொம்ப ரியலிஸ்ட்டிக்கா, சமூகத்துக்குத் தேவையான படமா இருக்கும்.

இந்தப் படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவுக்குத் திரையிடத் தேர்ந்தெடுகப்பட்டு எதிர்பார்க்க முடியாத அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைச்சது. அதனால, உடனே ரிலீஸ் பண்ணிடலாம்னு முடிவு பண்ணிட்டோம். ஆனா, தமிழ்நாட்டுல தங்களோட பேனர் போயிடும், தமிழ் கலாச்சாரம் கெட்டுடும்னு பல தியேட்டர்க்காரங்க, விநியோகஸ்தர்கள் முன் வரவேயில்ல.

அப்புறம், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் தனஞ்செயன் சாருக்கு படம் ரொம்ப புடிச்சுப்போச்சு. சமூக சிந்தனையும் சமூகத்தைப் பற்றிய புரிதலும் அவருக்கு இருக்கு. 100 தியேட்டருக்கு மேல நானே ரிலீஸ் பன்றேன்னு உறுதியா சொல்லிட்டார். இப்போ, ரிலீஸ் ஆகப்போகுது. எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த நேரத்துல தனஞ்செயன் சாருக்கு நன்றியைச் சொல்லிக்கிறேன்.”

“ஆணவப்படுகொலைகள் குறித்த உங்கள் பார்வை என்ன?”

“பாலியல் வன்கொடுமைகளை எப்படி கடுமையா தண்டிக்கணும்னு சொல்றோமோ, அதேமாதிரிதான் ஆணவப்படுகொலைகளும். மிகக்கடுமையாக கண்டிக்கணும். சிறப்புச் சட்டங்களை இயற்றி மிகக் கடுமையாக தண்டிக்கணும். ஏன்னா, ஆணவக்கொலைகள் மிருகத்தனமான செயல். தன்மீது தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் சாதி, மதம், இனம், மொழியை ஒரு சப்போர்ட் சிஸ்டமா எடுத்துக்கிறாங்க.

காதல் என்பது பொதுவுடைமை
காதல் என்பது பொதுவுடைமை

அதுவே, ரொம்ப தன்னம்பிக்கையாக இருக்கக் கூடியவர்களுக்கு இதெல்லாம் தேவையில்லை. அவர்கள், சமூகத்தையும் மனிதநேயத்தையும்தான் முக்கியமா நினைப்பாங்க. அப்படி, இருந்தா ஆணவக்கொலைகள் குறைய ஆரம்பிச்சிடும். யார் உயிரையும் எடுக்கிற உரிமை யாருக்கும் கிடையாது. என் சாதி அல்லாத, என் மதம் அல்லாத, என் இனம் அல்லாத, என் மொழி அல்லாத காரணத்திற்காக ஒருவர் கொலை செய்கிறார் என்றால் அது மிகப்பெரிய குற்றம். மனிதனால் எவ்வளவு கீழ்த்தரமாக யோசிக்கமுடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.’

“உங்களின் ‘தலைக்கூத்தல்’ படம் தந்தை மீது மகனுக்கு இருக்கு பேரன்பை விளக்கும் கதை. உங்கள் தந்தையின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு குறித்து?”

“என் அப்பா அந்தச் சூழலில் இருந்தா நான் எப்படி நடந்துக்குவேன் என்கிற கேள்விக்கான விடைதான் ‘தலைக்கூத்தல்’. என் அப்பா ராதாகிருஷ்ணன் என்னோட படிப்பு, வேலை அப்படின்னு எந்த விஷயமா இருந்தாலும் என்னை ஊக்கப்படுத்திக்கிட்டே இருப்பார். என்னோட முதல் படமான ‘லென்ஸ்’ பண்ணும்போது, ஊர்ல இருந்த நிலத்தை விற்று பணம் கொடுத்தார். அப்படியொரு பேரன்புகொண்ட அப்பா. என்னோட எல்லா விஷயத்திலேயுமே சப்போர்ட்டிவா இருப்பார். ரொம்ப ஃப்ரெண்ட்லியான அப்பா. எந்தளவுக்குன்னா, நானும் அவரும் ஒன்றாக சிகரெட் பிடிப்போம், ட்ரிங்ஸ் அடிப்போம். இதைவிட, எங்களது ஃப்ரெண்ட்ஷிப்புக்கு என்ன உதாரணம் தேவை?

காதல் என்பது பொதுவுடைமை
காதல் என்பது பொதுவுடைமை

இதைவிட, எங்களது ஃப்ரெண்ட்ஷிப்புக்கு என்ன உதாரணம் தேவை? நம்ம பெற்றோர் இருக்கிறவரை நாம குழந்தைங்கதான். ஆனா, அவங்க நம்பள விட்டு போகும்போதுதான் நாம அடல்ட் என்பதை உணர்றோம். நான் ரொம்ப லக்கி. இப்போவரைக்கும் என் அப்பா, அம்மாவுக்கு குழந்தையா இருக்கேன்.”

”பிடித்த இயக்குநர்கள் யார்? சமீபத்தில் ரசித்தப் படங்கள்?”

“மகேந்திரன் சார், பாரதிராஜா சார், மணிரத்னம் சார், பாலச்சந்தர் சார் எல்லோரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். சமீபத்துல ’கிஷ்கிந்தா காண்டம்’, ’லப்பர் பந்து’ படங்களை ரொம்ப ரசிச்சேன்.”

இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்
இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்

”உங்களோட அடுத்த படம்?”

”நிறைய கதைகள் இருக்கு. சமூகத்துக்கு இன்னும் தேவையான படங்களைக் கொடுக்கணும். அதுதான், என் முதல் நோக்கம். ஒரு படைப்பாளியா சமூக பங்களிப்பை என்னோட கடமையா நினைக்கிறேன். அதேநேரம், ஜனரஞ்சகமான கதைகளும் வெச்சிருக்கேன். அடுத்தடுத்து பண்ணனும்.”

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Big Boss 8: DAY 99; மோதிரத்தை திருப்பித் தந்த விஷால்... முட்டிக்கொண்ட ரவி - தர்ஷிகா!

விருந்தினர்களின் வருகையால் வீடு புத்துயிர் பெற்றது. தர்ஷிகா எத்தனை மெச்சூர்டான பெண் என்பது இன்னமும் அழுத்தமாக நீருபணமானது. எல்லை மீறி பேசிய அர்னவ்வை, சத்யாவும் ஜெப்ரியும் மிதமாக காண்டாக்கியது சுவாரசிய... மேலும் பார்க்க

ராஜபாளையம்: தடைசெய்யப்பட்ட திரைப்படத்தை வெளியிட முயற்சி - போலீஸூடன் நடந்த வாக்குவாதத்தால் பரபரப்பு!

ஈழப்போரை மையப்படுத்தியும், போரில் கொல்லப்பட்ட பெண் இசைவாணி அனுபவித்த சித்ரவதைகளை எடுத்துச்சொல்லும் விதமாகவும் பெங்களூரை சேர்ந்த இயக்குநர் கணேசன், 'போர்க்களத்தில் ஒரு பூ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளா... மேலும் பார்க்க

``கபில் தேவை சுட்டுக்கொல்ல துப்பாக்கியுடன் சென்றேன். ஆனால்..." - யுவராஜ் சிங்கின் தந்தை பகிர்வு

சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதில் பெயர் பெற்றவர் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங். இவர் 1980-81-ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியுடன் ஒரு டெஸ்ட் மற... மேலும் பார்க்க

Rana Daggubati: நடிகர் ராணா டகுபதி மீது எஃப்.ஐ.ஆர்! - ஹைதராபாத் காவல்துறை நடவடிக்கை!

பாகுபலி மூலம் உலகளவில் பிரபலமடைந்த நடிகர்களில் ராணா டகுபதியும் ஒருவர். தொடர்ந்து தெலுங்கு, தமிழ் எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாக இருக்கும் ராணா டகுபதி மீது ஹைதராபாத் நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்திருக... மேலும் பார்க்க

Ajith Kumar Car Race : ரஜினி முதல் ஓ.பி.எஸ் வரை... - பிரபலங்களின் வாழ்த்து மழையில் அஜித் குமார்

துபாயில் நடந்த கார் ரேசில் நடிகர் அஜித் குமாரின் அஜித் குமார் அணி 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அவருக்கு பல பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.Congratulations my dear #AjithKumar.... மேலும் பார்க்க