செய்திகள் :

`பால் 43.8%, ஆடை 38.7%, காபி 29.7%..' அமெரிக்கா விதித்த வரி; இந்தியா என்ன செய்யப்போகிறது?

post image

'இந்தியாவிற்கு 26 சதவிகித வரி, சீனாவிற்கு 34 சதவிகித வரி, ஜப்பானுக்கு 26 சதவிகித வரி...'

- நேற்று முன்தினம் (ஏப்ரல் 2), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விகிதத்தை அடுக்கிக்கொண்டே போனார்.

'இவை'களுக்கு வரி இல்லை!

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து இந்தியப் பொருள்களுக்கும் 26 சதவிகித வரி விதிக்கப்பட்டாலும், இந்த வரிக்கு செமி-கண்டக்டர், பார்மசூட்டிக்கல், செம்பு உள்ளிட்ட பொருள்களுக்கு விதிவிலக்கு உண்டு.

இந்த வரி விலக்கு இந்தியாவிற்கு மட்டுமல்ல. அனைத்து நாடுகளுக்குமே பொருந்தும்.

'இவை'களுக்கு வரி இல்லை!|ட்ரம்ப்
'இவை'களுக்கு வரி இல்லை!|ட்ரம்ப்

எதற்கு, எவ்வளவு வரி?

இதெல்லாம் சரி... எந்தப் பொருளுக்கு எத்தனை வரி என்ற கேள்வி இப்போது எழும். முதலில் அமெரிக்கா எந்த பொருளின் மீது அடிப்படையாக எவ்வளவு வரி விதிக்கிறது என்பதை பார்த்துவிடுவோம்.

பால் பொருள்களுக்கு 16.8 சதவிகிதம், ஆடைக்கு 11.7 சதவிகிதம், ரசாயனங்களுக்கு 2.7 சதவிகிதம், காபி, தேநீர், கொக்கோ, மசாலாப்பொருட்களுக்கு 1.5 சதவிகிதம், எலக்ட்ரானிக் பொருட்களுக்கு 1.2 சதவிகிதம்.

இதே பொருள்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரியின் படி, அமெரிக்கா இந்தியாவிடம் இருந்து வசூலிக்கப்போகும் வரி அளவு முறையே 43.8 சதவிகிதம், 38.7 சதவிகிதம், 29.7 சதவிகிதம், 28.5 சதவிகிதம், 28.2 சதவிகிதம் ஆகும்.

இன்னும் முக்கிய துறைகளாக நகைகள் மற்றும் நவரத்தினங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, உணவு மற்றும் விவசாயப் பொருள்களுக்கு வரிகள் முறையே 5.5 - 13.5 சதவிகிதத்தில் இருந்து 32.5 - 40.5 சதவிகிதமும், 5.2 சதவிகிதத்தில் இருந்து 32.2 சதவிகிதமும், 4.5 சதவிகிதத்தில் இருந்து 31 - 32 சதவிகிதமும் உயர்த்தப்படுகிறது.

பேச்சுவார்த்தைக்கு தயார் - ட்ரம்ப்
பேச்சுவார்த்தைக்கு தயார் - ட்ரம்ப்

இந்த வரிகள் தான் தொடருமா?

ஆக, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இதே வரி தான் தொடருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அப்படி தொடர்ந்தால் அது அந்த நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, உலகம் மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத்தையே பாதிக்கும்.

குறிப்பாக, இந்த வரி உயர்வினால் இந்த இறக்குமதி பொருள்களின் விலை உயர்ந்து அமெரிக்காவின் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

'இந்த வரி தொடரும்' என்று சற்றும் மாறாமல் அமெரிக்கா வெள்ளை மாளிகை கூறியிருக்கிறது. ஆனால், அந்த வெள்ளை மாளிகைக்கும், அமெரிக்காவிற்கும் அதிபரான ட்ரம்ப், "பேச்சுவார்த்தைக்கு தயார்" என்று மற்ற உலக நாடுகளுக்கு தூது விட்டுள்ளார்.

எதிர்பார்க்கப்படுவது என்ன?

பிற நாடுகள் அமெரிக்க பொருள்கள் மீது விதிக்கும் வரியை குறைக்க வேண்டும் என்பது தான் ட்ரம்ப்பின் ஒற்றை குறிக்கோள். அப்படி எந்த நாடு குறைக்கிறதோ, அந்த நாட்டின் மீதான வரியை ட்ரம்ப் குறைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் 'அமெரிக்க பொருள்கள் மீதான் வரி குறைப்பு' என்ற அறிவிப்புகளை பல நாடுகளிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்தியா என்ன செய்யப்போகிறது?

கடந்த வாரத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா அதிகாரிகளுக்கு இடையே வரி குறித்த பேச்சுவார்த்தை நடந்தது.

மேலும், இந்த ஆண்டின் இறுதியில் இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே வணிக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதன் விளைவாக, அமெரிக்கா நம் மீதான வரிகளை குறைக்க வாய்ப்புகள் உள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Modi: `காங்கிரஸை விட அதிகமான நிதியை தமிழ்நாட்டிற்கு தந்திருக்கிறோம்' - பிரதமர் மோடி உரை

இலங்கை விசிட்டை முடித்துவிட்டு, அங்கிருந்து இன்று மதியம் 12.40 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தார் பிரதமர் மோடி. தமிழக அரசு சார்பில் மோடியை வரவேற்ற ஆளுநர் ரவி, கம்பராமணம் புத்தகத்தைப் பரிசா... மேலும் பார்க்க

ராஜபாளையம்: இரண்டு நாளில் 80 பேரைக் கடித்த தெருநாய்கள்- பொதுமக்கள் அச்சம்

ராஜபாளையம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லையால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சிகிச்சைக்கு வந்தவர்கள்எனவே, ராஜபாளையம் சுற்றுவட்டாரத்தில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்... மேலும் பார்க்க

Modi TN Visit: திறந்துவைத்து, பச்சைக்கொடி அசைத்த பிரதமர் மோடி; பாம்பன் பாலத்தைக் கடந்து சென்ற ரயில்!

இலங்கை விசிட்டை முடித்துவிட்டு, அங்கிருந்து இன்று மதியம் 12.40 மணியளவில் ராமேஸ்வரம் வந்தார் பிரதமர் மோடி. தமிழக அரசு சார்பில் மோடியை வரவேற்ற ஆளுநர் ரவி, கம்பராமணம் புத்தகத்தைப் பரிசாக வழங்கினார். சரிய... மேலும் பார்க்க

Waqf: `முஸ்லிம்களை அடுத்து கிருஸ்த்துவர்களை குறிவைக்கிறது பாஜக...' - செல்வப்பெருந்தகை

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதா 2025-ஐ பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியிருந்தது. இந்த விவகாரத்தில், `சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் பாஜக அரச... மேலும் பார்க்க

Waqf: ஒப்புதல் வழங்கிய முர்மு; நடைமுறைக்கு வந்த வக்ஃப் திருத்த மசோதா; முக்கிய திருத்தங்கள் இவைதான்!

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதாவை, 2025-ஐ பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியிருந்தது. இந்த விவகாரத்தில், `சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் பாஜக ... மேலும் பார்க்க

Modi TN Visit: பாம்பன் பாலம் திறப்பு `டு' ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் - மோடி விசிட் அப்டேட்ஸ்!

இலங்கை விசிட்டை முடித்துவிட்டு, இன்று மதியம் ராமேஸ்வரம் வருகிறார் பிரதமர் மோடி. ராமநாதசுவாமி கோயிலில் பகல் 12.45 மணியளவில் பிரதமர் மோடி தரிசனம், பூஜை செய்ய உள்ளார். பிரதமர் மோடி வருகையையொட்டி இன்று ரா... மேலும் பார்க்க