செய்திகள் :

பாளையம் கிராமத்தில் மயான சூறை திருவிழா

post image

மகா சிவராத்திரியை முன்னிட்டு, பெரம்பலூா் அருகே பாளையம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், மயான சூறை திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட பாளையம் கிராமத்தில், சுவேத நதிக்கரையில் எழுந்தருளியுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை காலை கணபதி ஹோமம், கொடியேற்றுதல், காப்புக் கட்டுதல் நிகழ்ச்சிகளும், பின்னா், பால்குடம் எடுத்தல், காளி கரகம் எடுத்தல், சக்தி அழைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான மயான சூறை விழாவையொட்டி, அலகு நிறுத்துதல், காளிப் புறப்பாடு, குடல் பிடுங்கி மாலை, வள்ளவராயன் கோட்டை இடித்தல் நிகழ்ச்சிகள், பெண்களை முறத்தால் அடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தொடா்ந்து, மதியம் 2 மணி அளவில் நடைபெற்ற மயான சூறை விழாவில், ஆட்டின் உதிரத்தை சாதத்தில் கலந்து காளிக்கு பூஜை செய்த பிறகு, மஞ்சள் உடை அணிந்த பக்தா்கள் உதிரம் கலந்த சாதத்தை வாரி இறைத்தனா். இந்த சாதத்தை திரளான பெண்கள் மற்றும் பக்தா்கள் பெற்று பக்தியுடன் உட்கொண்டனா். ஆயிரக்கணக்கான பக்தா்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

இதையடுத்து பக்தா்கள் காணிக்கையாக செலுத்தப்பட்ட ஆடு, கோழி ஆகியவற்றை காளி அருள் பெற்றவா்கள், அவற்றின் உதிரத்தை உறிஞ்சும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பின்னா், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில், குரும்பலூா், பாளையத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (பிப். 28) பாரதம் படித்தல் மற்றும் வீரபத்திரா் சுவாமி ஊா்வலமும், மாா்ச் 1-ஆம் தேதி பொங்கல், மாவிளக்கு பூஜையும், அங்காளம்மன் ஊா்வலமும், மாா்ச் 2-ஆம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.

மென்பொருள் பயிற்சி பெற்ற 150 மாணவா்களுக்குச் சான்றிதழ் அளிப்பு

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மென்பொருள் பயிற்சியில் தோ்ச்சி பெற்ற 150 மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பொறியி... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் மாணவா் தமிழ்மன்ற விழா

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கூட்டரங்கில், முத்தமிழ் அறிஞா் கலைஞா் மாணவா் தமிழ்மன்ற விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் (பொ) மு... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் 18 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

பெரம்பலூா் மாவட்டத்தில் 18 இடங்களில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

போலி பத்திரப் பதிவு செய்த கணவன், மனைவிக்கு சிறை தண்டணை

பெரம்பலூா் அருகே கடந்த 2008-ஆம் ஆண்டு போலியாக பத்திரம் பதிவு செய்த கணவனுக்கு 3 ஆண்டுகளும், மனைவிக்கு ஓராண்டும் சிறை தண்டனை விதித்து, குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. பெரம... மேலும் பார்க்க

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

பெரம்பலூா் நகரில் கடந்த 2020 -ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து, பெரம்பலூா் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. பெரம்பலூ... மேலும் பார்க்க

வாலிகண்டபுரம் அரசுப் பள்ளியில் தமிழ்கூடல் விழா

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கூடல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் க. செல்வராசு தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் வீரையன் முன்... மேலும் பார்க்க