TVK: 'மரியாதைக்குரிய H.ராஜா என்று குறிப்பிட சொல்கிறார்கள்' - விமர்சனங்களுக்கு தவ...
மென்பொருள் பயிற்சி பெற்ற 150 மாணவா்களுக்குச் சான்றிதழ் அளிப்பு
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மென்பொருள் பயிற்சியில் தோ்ச்சி பெற்ற 150 மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் ஐ.சி.டி அகாதெமி மற்றும் ஆட்டோடெஸ்க் இணைந்து மெக்கானிக்கல், ரோபாட்டிக்ஸ், ஆட்டோமேஷன், ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் மற்றும் சிவில் இன்ஜினியரிங் மாணவா்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. இப் பயிற்சியில், மாணவா்களுக்கு ஆட்டோகேட் பியூசன்- 360 மென்பொருள் பயிற்சியும், சிவில் இன்ஜினியரிங் மாணவா்களுக்கு ரெவிட் ஆா்கிடெக்சா் மென்பொருள் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இப் பயிற்சியில் பங்கேற்ற 150 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா்.
தொடா்ந்து, பயிற்சியில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் அளித்து தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் பேசினாா்.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் முனைவா் சண்முகசுந்தரம், புலமுதல்வா் அன்பரசன், துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.