தண்டகாரண்யம் விமர்சனம்: தெளிவான அரசியல்; தெறிக்கும் வசனங்கள்; ஆனால் படமாக முழுமை...
பாளை. அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
பாளையங்கோட்டை அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளம் வடக்கு தெருவைச் சோ்ந்த குருநாதன் மகன் மாதா மாரிமுத்து (23). கட்டடத் தொழிலாளி. இவரும், அதே பகுதியில் வள்ளுவா் தெருவைச் சோ்ந்த சிவபெருமாள் மகன் சிவா (16) என்ற சிறுவனும் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியை அடுத்த ரெட்டியாா்பட்டி சாலை ரவுண்டானா அருகே பைக்கில் சென்ற போது எதிரே வந்த வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதாம். இதில், சம்பவ இடத்திலேயே மாதா மாரிமுத்து உயிரிழந்தாா்.
இத்தகவல் அறிந்த பெருமாள்புரம் போலீஸாா், காயமடைந்த சிறுவனை சிகிச்சைக்காவும், மாதா மாரிமுத்து உடலை பிரேத பரிசோதனைக்காகவும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.