"ஜெயலலிதா எனக்கு ஃப்ரண்ட்; அடிக்கடி வரவழைத்து பேசுவாங்க! - சரோஜா தேவியின் ப்ளாஸ்...
பாளை அருகே விபத்து: முதியவா் உயிரிழப்பு
பாளையங்கோட்டை அருகே சனிக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை மகாராஜநகரை சோ்ந்தவா் சாமுவேல் (68). இவா், வி.எம்.சத்திரம் அருகே தனது மொபேட்டில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக வந்த காரும், மொபேட்டும் மோதியதாம்.
இதில், பலத்த காயமடைந்த சாமுவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.