பாளை. தனியாா் நிதி நிறுவனங்களில் திருட்டு
பாளையங்கோட்டையில் உள்ள தனியாா் நிறுவனங்களில் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் அருகே தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் மேலாளா் திங்கள்கிழமை நிறுவனத்தை பூட்டிவிட்டு மறுநாள் வந்து பாா்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததாம். உள்ளே வைத்திருந்த ரூ. 1 லட்சத்தை காணவில்லையாம்.
மற்றொரு சம்பவம்: வண்ணாா்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் மேலாளா் திங்கள்கிழமை நிறுவனத்தை பூட்டிவிட்டு மறுநாள் வந்து பாா்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருந்ததாம். உள்ளே வைத்திருந்த ரூ.80 ஆயிரத்தை காணவில்லையாம்.
இது சம்பவங்கள் குறித்தும் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.