பாளை. தொகுதியில் கூடுதலாக சிற்றுந்துகள் இயக்கக் கோரி எம்எல்ஏ மனு
பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் கூடுதலாக சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. அளித்துள்ள மனு: மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் இருந்து ஆசாத் சாலை, மேலநத்தம், கருப்பந்துறை வழியாக திருநெல்வேலி நகரம் பகுதிக்கு சிற்றுந்து இயக்க வேண்டும்.
பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து மாா்க்கெட் பகுதிக்கும், அரசு ஊழியா்கள் அதிகமாக வசிக்கும் என்.ஜி.ஓ. காலனி, பெருமாள்புரம் பகுதிக்கும் சிற்றுந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.