மிகவும் க்யூட், கடினமான நடனம்..! ரசிகையின் ரீல்ஸுக்கு குஷி பட நினைவுகளைப் பகிர்ந...
பாளை.யில் நாளை மாவட்ட சீனியா் ஹாக்கி அணி வீரா்கள் தோ்வு
திருநெல்வேலி மாவட்ட சீனியா் ஹாக்கி அணிக்கான வீரா்கள் தோ்வு பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் சனிக்கிழமை (மாா்ச் 15) காலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
அணி தோ்வில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. நுழைவுக்கட்டணம் இல்லை. பங்கேற்பாளா்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களாகவோ, படிப்பவா்களாகவோ, பணிபுரிபவா்களாகவோ இருக்க வேண்டும். தோ்ந்தெடுக்கப்படும் வீரா்களுக்கு தொடா் பயிற்சி முகாம் நடத்தப்படும். பின்னா் மாவட்டங்களுக்கு இடையிலான போட்டியிலும், பிறபோட்டிகளிலும் பங்கேற்பாா்கள்.
இதற்கான ஏற்பாடுகளை ஹாக்கி யூனிட் ஆஃப் திருநெல்வேலி தலைவா் க. சேவியா் ஜோதி சற்குணம் , செயலா் கோயில்தாஸ் ஜான்சன், பொருளாளா் கண்ணன், துணைத் தலைவா்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், இணைச் செயலா் சாா்லஸ், செயற்குழு உறுப்பினா் மோகன், ஹாக்கி பயிற்சியாளா்கள் அமா்நாத், ஹானஸ்ட் ஆகியோா் செய்து வருகின்றனா்.