பாா்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்
நாகா்கோவில், பாா்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, கட்சியின் குமரி மாவட்ட செயலாளா் ஆா்.செல்லசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கை: நாகா்கோவில் பாா்வதிபுரத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேம்பாலத்தின் கீழ் 5 சாலைகள் பிரியும் பகுதியில் எப்போதும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் அப்பகுதியில் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் அங்கு ஆய்வு நடத்தி, அப்பகுதியில் வைக்கப்பட்ட தடுப்புக் கட்டைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 5 சாலைகளின் போக்குவரத்தை கணக்கில் கொண்டு, அங்கு ரவுண்டானா அமைக்கப்பட வேண்டும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.