குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி!
`பா.ரஞ்சித் சார் போலவே புச்சிபாபு சனாவும்..' - வியக்கும் ஆடை வடிமைப்பாளர் ஏகன் ஏகாம்பரம்
புச்சிபாபு சனாவின் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'பெத்தி' படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன் முதல் ஷாட் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவில் ராம்சரணின் தோற்றமும், பீரியட் படத்திற்கான விஷயங்களும், பாய்ந்து வரும் ராம்சரணின் பின்னணியில் ஒலிக்கும் வாய்ஸ் ஓவரான ''ஒரே மாதிரி பண்றதுக்கும், ஒரே மாதிரி பொழைக்கறதுக்கும் எம்மாம் பெரிய வாழ்க்கையிருக்கு. எதுவாக இருந்தாலும் இந்த பூமியில் இருக்கப்பவே பண்ணிறணும். மறுக்கா பொறக்கவா போறோம்!' என்ற வார்த்தைகளும் படத்தை எதிர்பார்க்க வைத்துள்ளன. இதில் ரொம்பவும் மகிழ்ந்திருக்கிறார் படத்தின் ஆடை வடிவமைப்பாளரான ஏகன் ஏகாம்பரம்.

'உப்பென்னா' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த புச்சிபாபு சனா, இப்போது ராம் சரணின் 16-வது படத்தை இயக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் நடந்த இதன் பட பூஜையின் போது சிரஞ்சீவி சார் கிளாப் போர்டு அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்திருந்தார்.
ராம்சரணின் ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். மற்றும் சிவராஜ்குமார், ஜெகபதிபாபு, திவ்யேந்துசர்மா, ஜான்விஜய் என பலரும் நடித்து வருகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வருகிறார். அடுத்த ஆண்டு மார்ச் 27ம், தேதி ராம் சரணின் பிறந்தநாள் ஸ்பெஷாக வெளியாகிறது. படத்திற்கான காஸ்ட்யூமை ஏகன் ஏகாம்பரம் கவனித்து வருகிறார். இதற்கு முன் 'சார்ப்பட்டா பரம்பரை', 'தங்கலான்' படங்களில் பணியாற்றியவர்.
''இந்த படத்தின் மூலம் தெலுங்கு படவுலகில் பணியாற்றுவது சந்தோஷமா இருக்கு. 'பெத்தி'யும் பீரியட் படம்னால 'தங்கலான்'ல எனது ஒர்க் பார்த்து ராம்சரண் சார் பட வாய்ப்பு வந்தது.
நம்ம ஊரோட நேட்டிவிட்டி டச் இருக்கணும்னு என்னை கூப்பிட்டிருக்காங்கனு நினைக்கறேன். சிவராஜ் குமார் சார்னு எல்லோருக்குமே காஸ்ட்யூம்கள் அருமையாக வந்திருக்கு. அதற்கு இயக்குநர் புச்சிபாபு சார்தான் காரணம். பா.ரஞ்சி சார் போலவே அவரும் ரொம்ப நுட்பமா ஒர்க் பண்ணக்கூடியவர்.
படத்தின் காஸ்ட்யூம் பத்தி புச்சி சாரும் டீட்டெயிலாக எழுதி வைத்திருப்பதால், எனக்கும் எளிதானதாக இருக்கிறது.

'இதுதான் கலர் டோன். இப்படித்தான் ஃபேப்ரிக்ஸ் இருக்கணு. டிசைன் இப்படி வரணும்..' என ஒவ்வொரு விஷயமும் தெளியாக கேட்கறதால, எனக்கு சவாலாகவும் இருக்குது. நான் வடிவமைக்கும் ஆடைகள் எல்லாமே என்னோட ஸ்டைலான இயற்கை கலரிங்ல பயன்படுத்தியிருப்பதை ராம் சரண் சார் ரொம்பவே பாராட்டினார். 'சார்பட்டா பரம்பரை' காஸ்ட்யூமை எல்லாம் ரொம்பவே வியந்து சொன்னார்.'' என்கிற ஏகன், தமிழில் இப்போது கார்த்தியின் 'வா வாத்தியார்', மாரி செல்வராஜின் 'பைசன்' உள்பட சில படங்களில் பணியாற்றி வருகிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...