`எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தும் அருகதை அதிமுக-வைத் தவிர யாருக்கும் இல்லை' - ராஜ...
பிகாரில் நெருங்கும் தேர்தல்: ரூ.36,000 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!
பிகாரில் ரூ. 36,000 கோடியிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன் பல திட்டங்களை இன்று(செப். 15) தொடக்கியும் வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
பிகாரில் விரைவில் தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனையடுத்து, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி(என்.டி.ஏ.) ஆகஸ்ட்டில் தொடங்கிவிட்டது.
இந்த நிலையில், பிகார் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பூர்ணியா மாவட்டத்தில் சுமார் ரூ. 36,000 கோடியிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைத்ததுடன், பூர்ணியா விமான நிலையத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள புதியதொரு விமான முனையத்தையும் தொடக்கி வைத்தார். அதன்பின், பூர்ணியா - கொல்கத்தா இடையேயான முதல் விமானத்தையும் கொடியசைத்து அவர் தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பிகார் முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி மற்றும் பிற அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் உடனிருந்தனர்.