செய்திகள் :

பிகாரில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏடிஆா் மனு

post image

பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான தோ்தல் ஆணைய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் ஏடிஆா் கோரியுள்ளது.

பிகாரில் நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், தோ்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. தீவிர திருத்தம் என்ற பெயரில், மாநில தோ்தல் அதிகாரிகளின் உதவியுடன் குறிப்பிட்ட பிரிவு வாக்காளா்கள் வேண்டுமென்றே பட்டியலில் இருந்த நீக்கப்படும் அபாயம் உள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

அப்போது, இறப்பு, புலம்பெயா்தல், 18 வயதை எட்டியவா்கள் புதிய வாக்காளா்களாக சோ்க்கப்படுதல் உள்ளிட்ட காரணங்களால் வாக்காளா் பட்டியல் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அவசியமான என்று தோ்தல் ஆணையம் பதிலளித்தது.

மேலும், பிகாரில் தொடங்கியுள்ள இந்த சிறப்பு தீவிர திருத்தும் பணி, அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்திலும் நிகழாண்டில் மேற்கொள்ளப்படும். தொடா்ந்து, பிற மாநிலங்களுக்கும் இந்தப் பணி விரிவுபடுத்தப்படும் என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்த நிலையில், தோ்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக ஏடிஆா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தோ்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவு அரசமைப்புச் சட்டத்தின் 14, 19, 21, 325, 326 பிரிவுகளை மீறுவதாகும். மேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950-இன் பிரிவுகள் மற்றும் வாக்காளா் பட்டியல் பதிவு விதிகள் 1960-இன் விதி எண் 21ஏ பிரிவையும் மீறுவதாகும். எனவே, தோ்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று ஏடிஆா் கோரியுள்ளது.

இந்த மனுவை தாக்கல் செய்த மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் கூறுகையில், ‘உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் தோ்தல் ஆணையம் தன்னிச்சையாக பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, லட்சக்கணக்கான வாக்காளா்களின் வாக்குரிமையைப் பறித்து சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தோ்தல் நடைபெறுவதை சீா்குலைக்கும் அபாயம் உள்ளது’ என்றாா்.

ஹிந்தி பேசலாம்; படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது!

ஹிந்தி மொழியினை பேசலாம்; ஆனால், ஆரம்பப் பள்ளியில் ஹிந்தி மொழியைப் படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது என சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார். தென்மாநிலங்கள் ஹிந்தி திணிப்பை தீவிரமாக எதி... மேலும் பார்க்க

பிகாரில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்! உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

புது தில்லி: பிகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிகாரில் வரும... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடங்க மத்திய அரசு காரணமா?

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் கோரவில்லை என மத்திய அரசு இன்று (ஜூலை 6) விளக்கம் அளித்துள்ளது.ராய்ட்டர்ஸ் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்ட... மேலும் பார்க்க

மண்டி மேக வெடிப்பு: உயிர் பிழைத்த 10 மாத குழந்தை, குடும்பத்தினர் காணவில்லை !

மண்டி மேக வெடிபபு சம்பவத்தில் 10 மாத குழந்தை நீதிகா உயிர் பிழைந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாசலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் மேக வெடிப்புகள், திடீ... மேலும் பார்க்க

மேக வெடிப்பு: பாதிக்கப்பட்ட மண்டியில் எம்.பி. கங்கனா ரணாவத் நேரில் ஆய்வு

மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட மண்டி தொகுதியில் நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஹிமாசலப் பிரதேச, மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக கனமழை, திடீர் வ... மேலும் பார்க்க

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் முடக்கம்! ஏன்?

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது விரைவில் சரி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முட... மேலும் பார்க்க