செய்திகள் :

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனுமதியின்றி பாடல்! ரூ.2 கோடி இழப்பீடு கோரும் சோனி மியூசிக்!

post image

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தங்கள் பாடல்களைப் பயன்படுத்தியதற்காக சோனி மியூசிக் இந்தியா இழப்பீடு கோரியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அக்னிபத் படத்தின் சிக்னி சமேல் மற்றும் கோரி தேரி பியார் மெய்ன் படத்தின் தாத் தேரி மெயின் ஆகிய இரு பாடல்கள் பயன்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் சல்மான் கான்

இந்த இரு பாடல்களுக்கும் சோனி மியூசிக் இந்தியா உரிமம் பெற்றுள்ள நிலையில், பொது உரிமங்களை ஃபோனோகிராபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடெட் (Phonographic Performance Limited - PPL) நிர்வகித்து வருகிறது. இந்தப் பாடல்களை நிர்வகித்து வரும் நிறுவனங்களின் அனுமதியோ அங்கீகாரமோ பெறாமல், அவற்றைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

இந்த நிலையில்தான், இந்த இரு பாடல்களையும் அனுமதி பெறாமல் பயன்படுத்தியதற்காக ரூ. 2 கோடி இழப்பீடு மற்றும் உரிமக் கட்டணத்தைக் கோரி, பிக்பாஸ் 19 நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களுக்கு பிபிஎல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிக்பாஸ் 19 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வரும் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு, சம்பளமாக ரூ. 120 கோடி முதல் 150 கோடி வரையில் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க:ரூ.1,330 கோடி சொத்து! டிரம்ப்பின் 19 வயது மகன் அசத்தியது எப்படி?

Bigg Boss 19 Makers Sued For Rs 2 Crore Over Unauthorised Use Of Songs

சிம்பு - 49 அப்டேட்! ஆவலுடன் காத்திருக்கும் கூட்டணி?

வெற்றிமாறன் - சிலம்பரசனின் புதிய படத்தின் அறிவிப்பை தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனது 49 ஆவது படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கவுள்ள நிலையில், அக்டோபர் 4 ஆம் தே... மேலும் பார்க்க

நிவின் பாலியின் புதிய பட ரிலீஸ் தேதி!

நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ’சர்வம் மாயா’ என்ற படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் நகைச்சுவை மற்றும் த்ரில்லர் கலந்து உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் மூலம் தெரியவருக... மேலும் பார்க்க

முதல்நாளில் ரூ.150 கோடிக்கும் அதிகம் வசூலித்த ஓஜி!

நடிகர் பவன் கல்யாணின் ’தே கால் ஹிம் ஓஜி’ திரைப்படம் முதல்நாளில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. இயக்குநர் சுஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் நேற்று... மேலும் பார்க்க

ஓய்வை அறிவித்த புஸ்கெட்ஸ்..! தலைசிறந்த மிட்ஃபீல்டர்!

இத்தாலியைச் சேர்ந்த செர்ஜியோ புஸ்கெட்ஸ் (வயது 37) கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த எம்எல்எஸ் சீசனுடன் தனது கால்பந்து பயணத்தை முடித்துகொள்வதாகக் கூறியுள்ளார். இத்தாலிய... மேலும் பார்க்க

கொட்டும் மழையில் பாடிய தனுஷ்..! வைரல் விடியோ!

நடிகர் தனுஷ் திருச்சியில் கொட்டும் மழையில் பாடல் பாடிய விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இட்லி கடை திரைப்படம் வரும் அக்.1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் தனுஷ் அவரே இயக்கி நடித்துள... மேலும் பார்க்க

ஓடிடியில் வெளியானது காட்டி!

நடிகை அனுஷ்காவின் காட்டி படம் அமேசான் பிரைமில் ஓடிடியில் இன்று (செப்.26) வெளியானது. இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பார்க்கலாம் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. நடிகை அன... மேலும் பார்க்க