வங்தேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தோ்தல் முறைகேடு குறித்து விசாரணை
பிக் பாஸ்: 13வது வார நாமினேஷன் பட்டியல்!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் 13வது வாரத்தில் 8 பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் 10 பேர் உள்ள நிலையில், அதில் 8 பேர் வெளியேற வேண்டும் என போட்டியாளர்கள் வாக்களித்துள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் குறைந்த வாக்குகளைப் பெற்றதாக கடந்த வாரம் ஜெஃப்ரி மற்றும் அன்ஷிதா வெளியேற்றப்பட்டனர்.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி 85வது நாளை எட்டியுள்ளது. தொடக்கத்தில் 24 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், தற்போது 10 போட்டியாளர்கள் எஞ்சியுள்ளனர்.
இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று நாமினேஷன் முறை கடைபிடிக்கப்பட்டது. இந்த வாரத்தில் நாமினேஷன் (பிக் பாஸ் வீட்டில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் எனக் கருதி போட்டியாளர்கள் வாக்களிப்பது) செய்யும் நடைமுறையில், அதிக நபர்களால் மஞ்சரி நாமினேஷன் செய்யப்பட்டார்.
இவரைத் தொடர்ந்து ரயான், ராணவ், வி.ஜே. விஷால், தீபக், அருண் பிரசாத், ஜாக்குலின், பவித்ரா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.
செளந்தர்யா, முத்துக்குமரன் மட்டும் யாராலும் நாமினேஷன் செய்யப்படவில்லை.
நாமினேஷன் பட்டியல் உள்ளவர்கள் மக்களிடம் அதிக வாக்குகளைப் பெறும் போட்டியாளர் காப்பாற்றப்படுவார். மிகக்குறைந்த வாக்குகளைப் பெறும் போட்டியாளர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்.
கடந்த வாரம் இரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டதைப் போன்று இந்த வாரமும் இரு போட்டியாளர்கள் வெளியேற்ற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | பிக் பாஸ் 8: டாப் 10 போட்டியாளர்கள் பட்டியல்!