செய்திகள் :

பிக் பாஸ் 8: உருவ கேலி செய்து சிக்கிய செளந்தர்யா! ரசிகர்கள் எதிர்ப்பு!

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

பிக் பாஸ் தொடரில் நடிகை ஜாக்குலினை உருவ கேலி செய்த செளந்தர்யாவுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன.

ஒவ்வொரு சீசனிலும் உருவ கேலி என்பது தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இம்முறை செளந்தர்யா உருவகேலி செய்துள்ளார்.

பிக் பாஸ் 8வது சீசனின் 17வது நாளான இன்று (அக். 23) ஹோட்டல் டாஸ்க் நடைபெற்றது. இதில் ஆண்கள் அனைவரும் ஹோட்டல் ஊழியர்களாகவும், பெண்கள் அனைவரும் வாடிக்கையாளர்களாகவும் நடிக்க வேண்டும்.

நேற்று ஹோட்டல் ஊழியர்களாக பெண்கள் இருந்தனர். ஆண்கள் வாடிக்கையாளர்களாக இருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று பெண்கள் வாடிக்கையாளர்களாக போட்டியில் பங்கேற்றனர்.

இதில் சப்பாத்தி சாப்பிட்ட செளந்தர்யா, அது உப்பாக இருந்ததால் ஹோட்டல் ஊழியரை அழைத்து கண்டித்துள்ளார். நான் சாப்பிடுவதே ஒரே ஒரு சப்பாதி. அதுவும் உப்பாக இருந்தால், என் முகம் அவங்க முகம் மாதிரி ஆகிவிடும் என ஜாக்குலினை சுட்டிக்காட்டி பேசினார்.

இதனால் கோபமடைந்த ஜாக்குலின், இனிமேல் காமெடிக்குக் கூட அப்படி சொல்லாதே, எனக்கு பிடிக்கவில்லை என செளந்தர்யாவிடம் கோபித்துக்கொண்டார்.

கொஞ்சம் கவனமாக (அட்டன்டிவா) இரு செளந்தர்யா என ஜாக்குலின் அறிவுறுத்தினார். செளந்தர்யா மந்தமாக இருப்பதாக ரசிகர்களும் கூறிவரும் நிலையில், ஜாக்குலின் சொன்னதற்கு செளந்தர்யா கோபமுற்று கத்தினார்.

ஒரே வார்த்தையை அடிக்கடி கூறி அழுத்தமாக பதிவு செய்யாதே என செளந்தர்யா ஜாக்குலினை எச்சரித்தார்.

எனினும் உருவ கேலி என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களே செளந்தர்யாவுக்கு எதிராக மாறியுள்ளனர். இதற்கு முன்பு ஜாக்குலினை மலமாடு எனக் கூறியதற்காகவும் செளந்தர்யா கண்டிக்கப்பட்டார். தற்போது மீண்டும் உருவ கேலி செய்துள்ளதால் ரசிகர்கள் பலர் செளந்தர்யாவை விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | பிக் பாஸ் 8: இந்த வார 'நாமினேஷன்' பட்டியல்!

சுந்தரி தொடர் விரைவில் முடிகிறது!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சுந்தரி தொடர் விரைவில் முடியவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுந்தரி தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகளை பிரமாண்டமாக படப்பிடிப்பு செய்ய குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சுந... மேலும் பார்க்க

தீபாவளி: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோருக்கு வசதியாக சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே புதன்கிழமை அறிவித்துள்ளது.திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்துக்கு நவ. 3 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு புறப... மேலும் பார்க்க

14 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மே... மேலும் பார்க்க

9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

டானா புயல் காரணமாக, சென்னை, கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் நேற்று ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட நிலையில், இன்று 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.டானா புயல் முன்னெச... மேலும் பார்க்க

உச்சகட்ட பாதுகாப்பில் தமிழகம்! 8 மாவட்டங்களில் உளவுத் துறை கண்காணிப்பு!

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தமிழகத்தில் மக்கள் கூடும் இடங்களில் பயங்கரவாத சதித் திட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கையை தொடர்ந்து, தீவிர கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டுள்... மேலும் பார்க்க

நெருங்கும் தீபாவளி: ஆடுகள் விற்பனை அமோகம்

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ஆட்டுச் சந்தைகளில், அமோகமாக விற்பனையாகும் ஆடுகள். ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் வியாபாரிகள்.தீபாவளி பண்டிகை நெருங்குவதால் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சந்தைக... மேலும் பார்க்க