ஆஸி. ஓபன்: இந்திய வம்சாவளி இளம் வீரருக்கு ஜோகோவிச் பாராட்டு!
பிக் பாஸ் 8: கடைசி வாரத்தில் வெளியான காதல்!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கடைசி வாரத்தில் பார்வையாளர்கள் ஐ லவ் யூ சொல்லிக்கொண்ட விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13 வாரங்களை நிறைவு செய்து 14வது வாரத்தை எட்டியுள்ளது. போட்டி முடிவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இதனால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு வார இறுதியிலும் போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி உரையாடுவது வழக்கம். அவ்வபோது பார்வையாளர்களிடையேயும் உரையாடுவார்.
அந்தவகையில் பார்வையாளர்கள் கூடத்தில் இருந்த பெண் ஒருவர் எழுந்து நின்று விஜய் சேதுபதியிடம் உரையாடினார். அப்போது பேசிய அவர்,
''ஐ லவ் யூ என்பதை பெரும் கெட்ட வார்த்தையாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் அவ்வாறு கூறுவது எனக்குப் பிடித்துவிட்டது.
ஐ லவ் யூ என்பது கெட்ட வார்த்தை அல்ல என்ற முடிவுக்கு வந்துவிட்டார் எனது கணவர். இதனால் சமீப நாள்களாக அடிக்கடி என் கணவர் என்னிடம் ஐ லவ் யூ எனக் கூறுகிறார். இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதற்காக உங்களுக்கு (விஜய் சேதுபதிக்கு) நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டார்.
அப்போது அப்பெண்ணின் மகள் எழுந்து நின்று அம்மாவும் அப்பாவுக்காக ஐ லவ் யூ கூற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதனால் நெகிழ்ச்சி அடைந்த விஜய் சேதுபதி, அப்பெண்ணை தனது கணவருக்கு ஐ லவ் யூ கூறுமாறு கேட்டுக்கொண்டார். அவரும் தனது மகளின் விருப்பத்துக்காக கணவருக்கு ஐ லவ் யூ கூறினார்.
ஐ லவ் யூ என்ற சொற்கள் தவறானது என்ற கண்ணோட்டத்தில் இருந்த பெற்றோர்கள் தற்போது மாறிமாறி அதனைச் சொல்லி அன்பைப் பரிமாறிக்கொண்ட விடியோ, இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | பிக் பாஸ் 8: முத்துக்குமரனை விமர்சித்த விஜய் சேதுபதி!