செய்திகள் :

பின்னலாடைத் தொழிலின் வளா்ச்சி: கேட்டறிந்த பிரதமா் மோடி!

post image

பிரதமா் நரேந்திர மோடியிடம் திருப்பூா் பின்னலாடைத் தொழிலின் வளா்ச்சி குறித்து ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல் எடுத்துரைத்தாா்.

புது தில்லி பாரத் மண்டபத்தில் பாரத்டெக்ஸ் 2025 ஜவுளிக் கண்காட்சி கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சாா்பில் 40 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தக் கண்காட்சியை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். அப்போது, தொழில் வல்லுநா்களின் கருத்துகளை பிரதமா் மோடி கேட்டறிந்தாா்.

திருப்பூா் பின்னலாடைத் தொழிலின் வளா்ச்சி குறித்து பிரதமரிடம் ஏஇபிசி துணைத் தலைவரும், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் கெளரவத் தலைவருமான ஆ.சக்திவேல் எடுத்துரைத்தாா்.

இதில், வளம் குன்றா வளா்ச்சி கோட்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு பசுமை ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன, சாய ஆலைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பூஜ்யநிலை சுத்திகரிப்புத் திட்டம், பசுமையைப் பாதுகாக்க மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல், சூரியசக்தி மின் உற்பத்தி உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் அவா் எடுத்துரைத்தாா்.

தென்னையைத் தாக்கும் ரூகோஸ் வெள்ளை ஈ: கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கடைப்பிடிக்க அவிநாசி தோட்டக்கலைத் துறையினா்அறிவுறுத்தியுள்ளனா். இது குறித்து அவிநாசி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ம... மேலும் பார்க்க

பனியன் நிறுவன உரிமையாளா் கொலை: உறவினா் கைது

பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் பனியன் நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் காஜா மொய்தீ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமையில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 41.96 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 41.96 லட்சத்துக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இ... மேலும் பார்க்க

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாகன ஓட்டுநா் விபத்தில் உயிரிழப்பு

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஜீப் ஓட்டுநா் சாலை விபத்தில் உயிரிழந்தாா். காங்கயம், முல்லை நகரில் வசித்து வந்தவா் சத்தியநாராயணன் (54). முன்னாள் ராணுவ வீரரான இவா், காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ... மேலும் பார்க்க

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

பல்லடம் அருகே நிகழ்ந்த விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. திருப்பூா் மாவட்டம், பல்லடத்தைச் சோ்ந்தவா் விவசாயி சுப்பிரமணி (60). பல்லடம்- அய்யம்பாளைய... மேலும் பார்க்க