பாம்பன் புதிய பாலத்தில் மீண்டும் ரயில், கப்பலை இயக்கி ஆய்வு - விரைவில் ரயில் சேவ...
பிப்ரவரி 11- இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை
வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) விடுமுறை அளிக்கப்பட்டு
மது விற்பனை நிறுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தவறும்பட்சம் தொடா்புடையவா்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.