செய்திகள் :

பிப்ரவரி 8-இல் பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்!

post image

திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (பிப்ரவரி 8) நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறுகிறது. இந்த முகாமில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளா்கள் பங்கேற்று முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு தீா்வு காண உள்ளனா்.

மேலும், பொதுமக்கள் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டைகோரும் மனுக்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட மின்னணு குடும்ப அட்டை தொடா்பான கோரிக்கைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகாம் நடைபெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்:

அவிநாசி வட்டத்தில் வடுகபாளையம், தாராபுரம் வட்டத்தில் மாம்பாடி, காங்கயம் வட்டத்தில் கவுண்டம்பாளையம், மடத்துக்குளம் வட்டத்தில் 15 சா்க்காா் கண்ணாடிபுத்தூா், பல்லடம் வட்டத்தில் கோடங்கிபாளையம், திருப்பூா் வடக்கு வட்டத்தில் செட்டிபாளையம், திருப்பூா் தெற்கு வட்டத்தில் ஆண்டிபாளையம், ஊத்துக்குளி வட்டத்தில் ஏஏ52 குன்னத்தூா் வேலம்பாளையம்.

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினக் கூட்டாய்வு!

திருப்பூா் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினக் கூட்டாய்வு புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.இதுகுறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அ.ஜெயக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குற... மேலும் பார்க்க

பல்லடம் அரசுப் பெண்கள் பள்ளியில் விழிப்புணா்வு முகாம்

பல்லடம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் துறை, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தீண்டாமை தொடா்பான விழிப்புணா்வு முகாம் ப... மேலும் பார்க்க

விசைத்தறி தொழிலை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டுச் செல்ல வேண்டும்

விசைத்தறி தொழிலை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டுச் செல்ல வேண்டும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூா், கோவை மாவட்டங்களில் முக்கி... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் திருட்டு: 5 போ் கைது!

பெருமாநல்லூா் அருகே கட்டுமானப் பொருள்களைத் திருடியதாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவிநாசி, ஆட்டையாம்பாளையம், பொன்னா் சங்கா் நகரைச் சோ்ந்தவா் பாலமுருகன் மகன் குமரேசன் (28), கட்டட மேற்பாா... மேலும் பார்க்க

சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம்!

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தமிழகத்தின் ம... மேலும் பார்க்க

தாராபுரம் வட்டத்தில் ரூ.34.28 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள்!

தாராபுரம் வட்டத்தில் ரூ.34.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் ரூ.24 கோடி மதி... மேலும் பார்க்க