பிப். 25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்!
தஞ்சாவூா் வருவாய் கோட்ட அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டம் பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் வருவாய் கோட்ட அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டம் பிப்ரவரி 25-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதில், தஞ்சாவூா் கோட்டத்துக்கு உட்பட்ட தஞ்சாவூா், திருவையாறு, பூதலூா், ஒரத்தநாடு ஆகிய வட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.